Author Topic: ~ உருளைக்கிழங்கு ரோல்(தாமோதரன் (செப். தாமு) ~  (Read 347 times)

Offline MysteRy

உருளைக்கிழங்கு ரோல்(தாமோதரன் (செப். தாமு)



தேவையான பொருட்கள்

கோதுமை – 1 கப்
மெல்லிய ரவை – 1/2 கப்
எண்ணெய் – 1/4 தேக்கரண்டி
உப்பு – 1/2 தேக்கரண்டி
மசாலா செய்வதற்கு
உருளைக்கிழங்கு – 1/4 கிலோ
வெங்காயம்(பொடியாக நறுக்கியது) – 3 மேசைக்கரண்டி
மல்லித்தழை (பொடியாக நறுக்கியது) – 2 தேக்கரண்டி
இஞ்சி,
பச்சைமிளகாய் விழுது – 2 தேக்கரண்டி
உலர்ந்த மாங்காய்த்தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய்ப்பொடி – 1/2 தேக்கரண்டி
கறிமசாலாத்தூள் – 3/4 தேக்கரண்டி
எண்ணெய் – பொரிப்பதற்கு
உப்பு – தேவையான அளவு
மைதா பசை செய்வதற்கு
தண்ணீர் – 2 பங்கு
மைதா – 3 பங்கு

செய்முறை

கோதுமை, ரவை, எண்ணெய், உப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொண்டு ஈரத்துணி கொண்டு மூடி வைக்கவும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
இதனுடன் வெங்காயம், மல்லித்தழை, இஞ்சி,பச்சை மிளகாய் விழுது, மாங்காய்த்தூள், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கறிமசாலாதூள், சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கி வைத்துக் கொள்ளவும்.
இக்கலவையை எலுமிச்சை அளவு உருண்டைகளாக செய்து பிறகு நீளவாக்கில் உருட்டிக் கொள்ளவும்.
பிசைந்த சப்பாத்தி மாவிலிருந்து சிறிய
உருண்டைகள் செய்து சப்பாத்தி போல இடவும்.
தேய்த்த சப்பாத்தியின் ஒரு மூலையில் மசாலா உருட்டியதை வைத்துப் பாய் போல் சுருட்டவும்.
குழல் போல் சுருட்டியதும் ஓரங்களை உள்ளே மடித்து மைதா பசை கொண்டு ஒட்டவும். பிரிந்து வராமல் எல்லா பக்கங்களையும் சரியாக ஒட்டவும்.
இதே போல மாவு முழுவதையும் செய்து கொண்டு ஈரத்துணி கொண்டு மூடி வைக்கவும்.
ஒரு தடவைக்கு 4 அல்லது 5 சுருள்களை மிதமான சூட்டில் எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
மூன்று அல்லது நான்கு துண்டுகளாக வெட்டி தக்காளி சாஸ் உடன் பரிமாறவும்.