Author Topic: ~ கத்திரிக்காய் சாதம் -சைவ சமையல் ~  (Read 371 times)

Online MysteRy

கத்திரிக்காய் சாதம் -சைவ சமையல்



தேவையான பொருட்கள்

அரிசி – 1 கப்
கத்திரிக்காய் – 4
பெரிய வெங்காயம் – 1
கடலைபருப்பு – 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் – சிறிது
கடுகு – 1 /2 தேக்கரண்டி
நெய் – 2 மேசைக்கரண்டி
கருவேப்பிலை – சிறிது
உப்பு – சிறிது
வாங்கிபாத் பொடி செய்ய தேவையானவை
காய்ந்த மிளகாய் – 2 – 3
வர கொத்தமல்லி – 1 மேசைக்கரண்டி
கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
பட்டை – சிறிய துண்டு
கிராம்பு – 2
தேங்காய் துருவல் – 1 மேசைக்கரண்டி
உப்பு – 1 /2 தேக்கரண்டி
எண்ணெய் – 2 தேக்கரண்டி

செய்முறை

கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்த மிளகாய், கொத்தமல்லி, கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு, பட்டை, கிராம்பு ஆகியவற்றை தனித் தனியாக வறுத்துக் கொள்ளவும்.
கடைசியாக தேங்காய் துருவல் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இதனுடன் உப்பு சேர்த்து நன்கு பவுடராக அரைத்துக் கொள்ளவும்.
அரிசியை தனியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாகவும், கத்தரிக்காயை நீளமாக, மெல்லியதாகவும் நறுக்கிக் கொள்ளவும்.
கடையில் நெய் ஊற்றி சூடானதும், கடுகு சேர்த்து வெடிக்க விடவும். பின் கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு சேர்த்து லேசாக போன்னிரம்கும் வரை வதக்கவும்.
பின் நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின் கத்திரிக்காய், மஞ்சள்தூள் சேர்த்து கத்திரிக்காய் மிருதுவாகும் வரை வதக்கவும்.
இதனுடன் தயாரித்து வைத்துள்ள வாங்கிபாத் பொடி சேர்த்து நன்கு கலக்கவும். இறுதியாக வேக வைத்துள்ள சாதத்தை சேர்த்து கலக்கி அப்பளம் அல்லது சிப்ஸ் உடன் சேர்த்து பரிமாறவும்.