Author Topic: ~ வாழைக்காய் பொடிமாஸ் ~  (Read 520 times)

Offline MysteRy

~ வாழைக்காய் பொடிமாஸ் ~
« on: April 01, 2016, 09:00:42 PM »
வாழைக்காய் பொடிமாஸ்



தேவையானப்பொருட்கள்:

வாழைக்காய் – 1
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 1
தேங்காய்த்துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
சாம்பார் பொடி – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
சோம்பு – 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
உப்பு – தேவைக்கேற்றவாறு
எலுமிச்சை சாறு – 1/2 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)

செய்முறை:

* வாழைக்காயை தோலுடன் இரண்டாக வெட்டி, கொதிக்கும் நீரில் போட்டு 5 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும். சற்று ஆறியதும் தோலை உரித்து விட்டு, துருவிக் கொள்ளவும். அல்லது கைகளால் பொடியாக உதிர்த்துக் கொள்ளவும்.
* வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பை போட்டு தாளித்த பின்னர் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும்.
* அத்துடன் சோம்பை ஒன்றிரண்டாகப் பொடித்து சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அதில் துருவிய வாழைக்காய், சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி விட்டு, மூடி போட்டு, குறைந்த தீயில் 5 நிமிடங்கள் அடுப்பில் வைத்திருக்கவும்.
* கடைசியில் தேங்காய்த்துருவலை போட்டு நன்றாகக் கிளறி விட்டு, இறக்கி வைக்கும் முன் எலுமிச்சை சாறு விட்டு மீண்டும் ஒரு முறை கிளறி இறக்கி வைக்கவும்.
* சோம்பு வாசனை பிடிக்காதவர்கள், அதை தவிர்த்து விட்டு, பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை சேர்த்துக் கொள்ளலாம்.