Author Topic: ~ காலிஃபிளவர் சப்பாத்தி ~  (Read 347 times)

Offline MysteRy

காலிஃபிளவர் சப்பாத்தி



தேவையான பொருட்கள் :

சிறிய காலிஃபிளவர் – 1
கோதுமை மாவு – 2 கப்
சீரகம் – 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் – 5
உப்பு – தேவையான அளவு
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
கொத்தமல்லி – ஒரு கப்
எலுமிச்சைச்சாறு – 1 டீஸ்பூன்

செய்முறை :

* காலிஃபிளவரை நன்றாக கழுவி துருவிக் கொள்ளவும்.
* பச்சைமிளகாயைப் பொடியாக நறுக்கவும்.
* துருவிய காலிஃபிளவர், பச்சைமிளகாய், சீரகம், உப்பு, மஞ்சள்தூள் ஆகியனவற்றைக் கோதுமை மாவுடன் சேர்த்துக் கைகளால் கிளறி சுடுதண்ணீரைச் சேர்த்து மாவை நன்கு பிசைந்து கொள்ளவும்.
* இதனுடன் நறுக்கிய கொத்தமல்லியையும் சிறிது எலுமிச்சைச் சாற்றையும் சேர்த்து மீண்டும் பிசைந்து அரை மணிநேரம் ஊற வைக்கவும்.
* பிறகு உருண்டைகளாக்கி சப்பாத்தி வடிவில் வட்டமாக இட்டு சப்பாத்திக்கல்லில் போட்டு வேக வைத்து எடுக்கவும்.
* சுவையான காலிஃபிளவர் சப்பாத்தி ரெடி
நன்றி..மாலைமலர்