Author Topic: ~ பீட்ரூட் சாதம் ~  (Read 610 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227469
  • Total likes: 29061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ பீட்ரூட் சாதம் ~
« on: March 31, 2016, 09:37:57 PM »
பீட்ரூட் சாதம்



தேவையான பொருட்கள்

பாஸ்மதி அரிசி – 2 கப்
பீட்ரூட் – 2
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 1 சிறியது
கடுகு – 1 மேசைக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு – 1 தேக்கரண்டி
கருவேப்பிலை – ஒரு கொத்து
பச்சை மிளகாய், வரமிளகாய் – 1
MTR புளியோதரை பொடி (புளியோதரை பொடி) – 1 மேசைக்கரண்டி(விருப்பமெனில்)
மஞ்சள்தூள் – 1 /2 தேக்கரண்டி
மல்லித்தூள் – 1 /2 தேக்கரண்டி
சீரகதூள் – 1 /2 தேக்கரண்டி
மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
மல்லிதழை – சிறிது
உப்பு – தேவையான அளவு

செய்முறை

அரிசியை 4 கப் தண்ணீர், சிறிதளவு எண்ணெய், உப்பு சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
வேக வைத்த சாதத்தை ஆற வைத்துக் கொள்ளவும்.
வெங்காயம், பீட்ரூட் இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அல்லது பீட்ரூட்டை துருவிக் கொள்ளலாம்.
கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி சேர்த்து ஒரு நிமிடம் வரை வதக்கி , பின் மஞ்சள்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
கடைசியாக பீட்ரூட் சேர்த்து வதக்கி, தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.
பீட்ரூட் வெந்ததும் MTR புளியோதரை தூள் சேர்த்து மேலூம் ஒரு நிமிடம் வதக்கவும்.
வதக்கிய பீட்ரூட்டை, வேக வைத்துள்ள சாதத்துடன் கலந்து மல்லிதழை தூவி பரிமாறவும்.