Author Topic: ~ ஹரியாலி பிஷ் மசாலா ~  (Read 472 times)

Offline MysteRy

~ ஹரியாலி பிஷ் மசாலா ~
« on: March 31, 2016, 09:33:13 PM »
ஹரியாலி பிஷ் மசாலா



மீன் – அரைக் கிலோ
புதினா – கால் கட்டு
கொத்தமல்லித் தழை – கால் கட்டு
தக்காளி – 2
பெரிய‌ வெங்காயம் – ஒன்று
பச்சை மிளகாய் – 2
மிளகாய்த்தூள் – சிறிதளவு
உப்பு – சிறிதளவு
மஞ்சள் தூள் – சிறிதளவு

மீனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். மற்ற தேவையானவைகளை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
பிறகு மிளகாய்த் தூள், மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து அதை மீனின் மீது தடவி சிறிது நேரம் ஊற வைக்கவும்.
மிக்ஸியில் புதினா, கொத்தமல்லித் தழை, பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
பிறகு தக்காளியை விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் புதினா, கொத்தமல்லித் தழை விழுதை சேர்த்து வதக்கவும். அதனுடன் சிறிதளவு மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து மேலும் சிறிது நேரம் வதக்கவும்.
நன்கு வதங்கியதும் தக்காளி விழுதை சேர்த்து வதக்கவும்.
அதில் ஊற வைத்த மீனை சேர்த்து நன்கு பிரட்டி விடவும். மீன் வெந்ததும் இறக்கி பரிமாறவும். அடிக்கடி பிரட்ட வேண்டாம்.
சுவையான ஹரியாலி பிஷ் மசாலா ரெடி.