Author Topic: ~ பச்சை பயறு குழம்பு ~  (Read 316 times)

Online MysteRy

~ பச்சை பயறு குழம்பு ~
« on: March 31, 2016, 09:23:08 PM »
பச்சை பயறு குழம்பு



தேவையானப்பொருட்கள்

பச்சை பயறு – 1/2 கப்

புளி

சாம்பார் தூள் – 1 tbsp

மஞ்சள் தூள் – 1/4 tsp

தக்காளி – 1

சாம்பார் வெங்காயம் – 10 முதல் 15 வரை

பூண்டு – 2 அல்லது 3

எண்ணை – 1 tbsp

கடுகு – 1/2 tsp

வெந்தயம் – 1/2 tsp

பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை

கறிவேப்பிலை – சிறிது

உப்பு – 1 tsp

செய்முறை

பச்சை பயறை 5 முதல் 6 மணி நேரம் (அல்லது இரவு முழுவதும்) தண்ணீரில் ஊறவைக்கவும். ஊறிய பயறை நன்றாக கழுவி விட்டு ஒரு குக்கரில் போட்டு அத்துடன் சிறிது உப்பு, ஒரு கப் தண்ணீர் சேர்த்து 2 அல்லது 3 விசில் வரும் வரை வேக வைத்தெடுக்கவும்.

புளியை ஊற வைத்து பிழிந்தெடுத்து, தேவையான தண்ணீரைச் சேர்த்து 2 கப் அளவிற்கு புளிச்சாற்றை எடுத்து வைத்துக் கொள்ளவும்.

வெங்காயம், தக்காளி, பூண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், வெந்தயம், பெருங்காயம் சேர்த்து சிவக்க வறுக்கவும். பின் அதில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும். பின்னர் தக்காளிச் சேர்த்து நன்றாக மசியும் வரை வதக்கவும். புளித்தண்ணீரைச் சேர்த்து

அத்துடன் சாம்பார் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டுக் கலந்து கொதிக்க விடவும். குழம்பு நன்றாகக் கொதிக்க ஆரம்பித்ததும், வேக வைத்துள்ள பயறை இலேசாக மசித்து சேர்த்துக் கிளறி விடவும். மீண்டும் சில நிமிடங்கள் கொதிக்க விட்டு, இறக்கி வைக்கவும்.

சூடாக பரிமாறவும்.