நிர்வாணம் ஆபாசமல்ல
அது அழகு
முகில் சூழா
நீல வான்வெளி
பனி படரா மலைகள்
அமைதியான கடல்
அனைத்தும் நிர்வாணம் தான்
அதில் ஆபாசம் இல்லை
நம் மனம்
நிர்வாணமாக இருக்கும் போதுதான்
அழகு - அதில்
காமம் குரோதம்
வெறுப்பு வெறி
என்ற ஆடைகள் மூடும் போதுதான்
ஆபாசம் ஆகிறது
உடலின் நிர்வாணமும் அப்படிதான்
மனிதன் நிர்வாணமாக இருந்தபோது
ஆபாசமாக தெரியவில்லை
உடைகளே மனிதனை
ஆபாசம் ஆக்கின
மிருகங்கள் நிர்வாணமாக
திரிகின்றன
பறவைகள் நிர்வாணமாகவே
பறக்கின்றன
அவை அழகாகத் தானே இருக்கின்றன
நம் நிர்வாணம் மட்டும் ஏன்
ஆபாசமாகத் தெரிகிறது
மிருகங்களுக்கும் பறவைகளுக்கும்
நிர்வாணமான கண்களைப் படைத்த
இறைவன்
மனிதருக்கு மட்டும்
ஆபாசமான இதயத்தை படைத்தது விட்டான்
நம் கண்கள்
என்று நிர்வாணமாகிறதோ - அன்று
உலகமே அழகாகத் தெரியும்
நம் மனம் நிர்வாணமாகும் போது
நம் ஆன்மாவும் அழகாகத் தோன்றும்