Author Topic: ~ ப்ரெட் ரோல் ~  (Read 354 times)

Offline MysteRy

~ ப்ரெட் ரோல் ~
« on: March 30, 2016, 10:59:34 PM »
ப்ரெட் ரோல்



ப்ரெட் – 10 துண்டுகள்
துருவிய சீஸ் – ஒரு கப்
வெங்காயம் – 2
கேரட் – ஒன்று
உருளைக்கிழங்கு – 2
மிளகாய் தூள் – கால் தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – அரை தேக்கரண்டி
மிளகுத் தூள் – ஒரு சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை – ஒரு கொத்து
கடுகு – கால் தேக்கரண்டி
எண்ணெய் – பொரிக்க

தேவையானவற்றைத் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கு மற்றும் கேரட்டை வேகவைத்து மசித்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் கரம் மசாலா தூள், மிளகாய் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்புச் சேர்த்து வதக்கவும்.
அத்துடன் மசித்து வைத்துள்ள காய்கறிகளைச் சேர்த்து வதக்கவும்.
அதிலுள்ள தண்ணீர் வற்றும் வரை வதக்கி எடுத்து ஆற வைக்கவும்.
ஆறியதும் மசாலாக் கலவையை படத்தில் உள்ளவாறு உருட்டிக் கொள்ளவும்.
ப்ரெட் துண்டுங்களின் ஓரங்களை நறுக்கிவிட்டு, கையில் தண்ணீரைத் தொட்டுக் கொண்டு ப்ரெட்டை அழுத்தவும். மீதமுள்ள ப்ரெட் துண்டுகளையும் இதே போல் தண்ணீர் தொட்டு அழுத்தி வைக்கவும்.
ப்ரெட் துண்டுகளின் மேல் சீஸ் துருவலைப் பரவலாகத் தூவி, உருட்டி வைத்துள்ள மசாலா உருண்டையை ப்ரெட்டின் மீது ஒரு ஓரமாக வைக்கவும்.
பிறகு தண்ணீர் தொட்டுக் கொண்டு ப்ரெட்டை ரோல் செய்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ப்ரெட் ரோல்ஸைப் போட்டுப் பொரித்தெடுக்கவும்.
சுவையான ப்ரெட் ரோல் தயார். டொமேட்டோ சாஸுடன் பரிமாறவும்.