Author Topic: ~ பீட்ரூட் கீரை மசியல் ~  (Read 418 times)

Offline MysteRy

~ பீட்ரூட் கீரை மசியல் ~
« on: March 30, 2016, 09:50:33 PM »
பீட்ரூட் கீரை மசியல்



தேவையான பொருட்கள்:

பீட்ரூட் கீரை – 4 செடிகளின் இலைகள்
சின்ன வெங்காயம் – 7
தக்காளி – பாதி
பச்சைமிளகாய் – 1
புளி – சிறு கோலி அளவு
பூண்டு பல் – 7
உப்பு – தேவைக்கு

தாளிக்க:

நல்லெண்ணெய்
கடுகு
உளுந்து
மிளகு – 2
சீரகம்
காய்ந்தமிளகாய் – 1
பெருங்காயம்

செய்முறை:

• முற்றிய, பூச்சி இலைகளை நீக்கிவிட்டு, மீதமுள்ள கீரையை நன்றாக நீரில் அலசித் தண்ணீரை வடியவைக்கவும்.
• ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு, தக்காளி, புளி, கீரை இவற்றை அடுத்தடுத்து சேர்த்து வதக்கி ஆறியதும் மிக்ஸியில் போட்டு உப்பு சேர்த்து மசித்து எடுக்கவும். தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை.
• ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்து கீரை மசியலில் கொட்டவும்.
• இப்போது சுவையான, சிறிது பிங்க் நிறத்தினாலான பீட்ரூட் கீரை மசியல் தயார்