Author Topic: ~ தக்காளி – பாசிப்பருப்பு பச்சடி ~  (Read 472 times)

Online MysteRy

தக்காளி – பாசிப்பருப்பு பச்சடி



தேவையான பொருட்கள்:

தக்காளி – 3
ஊற வைத்த பாசிப்பருப்பு – கால் கப்,
தயிர் – ஒன்றரை கப்,
தேங்காய் விழுது – 3 ஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு,
பச்சை மிளகாய் – ஒன்று,
கடுகு – ஒரு டீஸ்பூன்,
காய்ந்த  மிளகாய் – 4,
சீரகம் – ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:

• தக்காளியை விதைகளை நீக்கி விட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.
• கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
• ஒரு பாத்திரத்தில் தக்காளி, பாசிப்பருப்பு, தயிர், தேங்காய் விழுது, கொத்தமல்லி, பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒன்று சேர்த்து, உப்பு போட்டு நன்றாக கலக்கவும்.
• கடாயில் எண்ணெயை சூடாக்கி… கடுகு, கடலைப்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் தாளித்து, தக்காளி கலவையுடன் சேர்த்தால்… சுவையான தக்காளி – பாசிப்பருப்பு பச்சடி ரெடி!