Author Topic: ~ கா‌ய்க‌றி இட்லி ~  (Read 374 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227472
  • Total likes: 29061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ கா‌ய்க‌றி இட்லி ~
« on: March 28, 2016, 08:59:48 PM »
கா‌ய்க‌றி இட்லி



தேவையான பொருட்கள்:

இட்லி மாவு – 2 கப்
பொடியாக நறுக்கிய காய்கறிகள் – அரை கப்
தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்
உதிராக வேகவைத்த பாசிப்பருப்பு – 2 தே‌க்கர‌ண்டி
மல்லித் தளை – சிறிதளவு
உப்பு – ஒரு சிட்டிகை

தாளிக்க:

கடுகு – 3 தே‌க்கர‌ண்டி
உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு – 3 தே‌க்கர‌ண்டி
இஞ்சி – ஒரு துண்டு
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
எண்ணெய் – 2 தே‌க்கர‌ண்டி

செய்முறை:

கடாயில் எண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, இஞ்சி, பச்சை மிளகாய், நறுக்கிய காய்கறிகள், கறிவேப்பிலை எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவும்.
பிறகு, தேங்காய் துருவல் சேர்த்து இறக்கி, வேகவைத்த பாசிப்பருப்பை சேருங்கள்.
இந்தக் கலவையை அப்படியே சூடாக இ‌ட்லி மாவில் சேர்த்துக் கலந்து, இட்லித் தட்டுகளில் ஊற்றி வேகவைத்தெடுங்கள்.
சுவையான கா‌ய்க‌றிக‌ள் இட்லி தயார்.