Author Topic: ஜானகி ஹிட்ஸ்  (Read 30693 times)

Offline Global Angel

Re: ஜானகி ஹிட்ஸ்
« Reply #60 on: January 19, 2012, 11:06:34 PM »
படம்: சின்ன மாப்பிள்ளை
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ, S ஜானகி



காதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா
காத்தாடும் மேலாக்கு உனை பின்னுதையா
காதோரம் லோலாக்கு கதை சொல்லுதடி
காத்தாடும் மேலாக்கு உனை பின்னுதடி
உன் முகத்தை பார்க்கையில என் முகத்தை நான் மறந்தேன்
(காதோரம்..)

நான் விரும்பும் மாப்பிள்ளைக்கு
நாள் கணக்கா காத்திருந்தேன்
(நான் விரும்பும்..)
வந்தாயே நீயும் வாசலை தேடி
கண்டேனே நானும் எனக்கொரு ஜோடி
உன்னாட்டந்தான் தங்கத்தேரு
கண்டதில்லை எங்க ஊரு
காதல் போதை தந்த கள்ளி
கந்தன் தேடி வந்த வள்ளி
நீ தொடத்தானே நான் பொறந்தேனே
நாளொரு வண்ணம் நான் வளர்ந்தேன்
(காதோரம்..)

வானவில்லை விலை கொடுத்து
வாங்கிடத்தான் காசிருக்கு
(வானவில்லை..)
என் கூட உன் போல் ஓவியப் பாவை
இல்லாமல் போனால் நான் ஒரு ஏழை
என்னாளும் நான் உங்க சொத்து
இஷ்டம் போல அள்ளி கட்டு
மேலும் கீழும் மெல்லத் தொட்டு
மேளம் போல என்னை தட்டு
நான் அதுக்காக காத்திருப்பேன்
நீ வரும் பாதை பார்த்திருப்பேன்
(காதோரம்..)


 
 
                    

Offline Global Angel

Re: ஜானகி ஹிட்ஸ்
« Reply #61 on: January 19, 2012, 11:07:25 PM »
படம் : உறுதி மொழி
இசை : இளையராஜா
பாடியவர் : ஜெயசந்திரன், S.ஜானகி



அதிகாலை நிலவே
அலங்கார சிலையே
புதுராகம் நான் பாடவா

இசைதேவன் இசையில்
புது பாடல் துவங்கு
எனை ஆளும் கவியே... உயிரே...

அதிகாலை கதிரே
அலங்கார சுடரே
புதுராகம் நீ பாடவா

மணிக்குருவி உனை தழுவ மயக்கம் பிறக்கும்
பருவக்கதை தினம் படிக்க கதவு திறக்கும் [மணிக்குருவி...]
விழியே உன் இமை இரண்டும் எனை பார்த்து மயங்கும்
உனை பார்த்த மயக்கத்திலும் முகம் பூத்து மலரும்
நமை வாழ்த்த வழி தேடி தமிழும் தலை குனியும்

அதிகாலை கதிரே
அலங்கார சுடரே
புதுராகம் நீ பாடவா

இசைதேவன் இசையில்
அசைந்தாடும் கொடியே
பனி தூங்கும் மலரே...உயிரே...[அதிகாலை ...]

அழகு சிலை இதயம் தனை வழங்கும் உனக்கு
ரதி மகளும் அடிபணியும் அழகு உனக்கு [அழகு...]
தவித்தேன் உன் அணைப்பில் தினம் துடித்தேன் என் உயிரே
இனித்தேன் என் இதயம் தனை இணைத்தேன் என் உயிரே
சுவைத்தாலும் திகட்டாத கவிதைகளை படித்தேன்
[அதிகாலை ...]


                    

Offline Global Angel

Re: ஜானகி ஹிட்ஸ்
« Reply #62 on: January 19, 2012, 11:08:24 PM »

படம்: கர்ணா
இசை: வித்யாசாகர்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி



மலரே மௌனமா மௌனமே வேதமா
மலர்கள் பேசுமா பேசினால் ஓயுமா அன்பே
(மலரே)

பாதி ஜீவன் கொண்டு தேகம் வாழ்ந்து வந்ததோ
மீதி ஜீவன் உன்னைப் பார்த்த போது வந்ததோ
ஏதோ சுகம் உள்ளூறுதே ஏனோ மனம் தள்ளாடுதே (2)
விரல்கள் தொடவா விருந்தைத் தரவா
மார்போடு கண்கள் மூடவா
(மலரே)

கனவு கண்டு எந்தன் கண்கள் மூடிக் கிடந்தேன்
காற்று போல வந்து கண்கள் மெல்லத் திறந்தேன்
காற்றே எனைக் கிள்ளாதிரு பூவே என்னைத் தள்ளாதிரு (2)
உறவே உறவே உயிரின் உயிரே
புது வாழ்கை தந்த வள்ளலே
(மலரே
)

                    

Offline Global Angel

Re: ஜானகி ஹிட்ஸ்
« Reply #63 on: January 19, 2012, 11:09:14 PM »
படம்: உன்னை வாழ்த்தி பாடுகிறேன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: KJ ஜேசுதாஸ், S ஜானகி


ஒரு ராகம் தராத வீணை நல்ல காதல் சொல்லாத பெண்மை
இந்த மண்ணில் ஏனடி பதில் கூறு கண்மணி (2)
அழகான கைகள் மீட்டும் வேளை...
ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை

நதியின் வேகம் பருவ மோகம் கடலைச்சேர மாறிபோகும்
நாளும் காதல் ராகம் பாடும் பாடும்
இதழில் போடும் இதழின் காயம் இதழில் ஆரும் இனிமையாகும்
தேகம் தீண்டும் நேரம் யோகம் யோகம்
உன்னை வாழ்த்தி பாடும் பாடல் உதய ராகமோ
நம்மை வாழ்த்தும் நமது உலகம் உதயமாகுமோ
புது கனவு பாலம் தெரிந்ததே...நெஞ்சினில் இன்பமும் கொஞ்சுது கெஞ்சுது

ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை
இந்த மண்ணில் தேவையே எழில் கொஞ்சும் பூவையே
அழகான கைகள் மீட்டும் வேளை...
ராகம் தராத வீணை நல்ல காதல் சொல்லாத பெண்மை

இளமைக்காட்டில் இனிமைக்கூட்டில் இருக்கும் தேனை எடுக்கும்போது
காலம் நேரம் தேவை இல்லை இல்லை
மலையின் ஓரம் மலர்ந்த பூவை பறிக்கும் வேடன் இருக்கும்போது
காவல் தாண்டும் முல்லை முல்லை
மானும் மீனும் சேர்ந்து மாயம் செய்வதேனடி
வானம் போடும் காமன் நேரம் கூடத்தானய்யா
அட மனதில் சாரல் அடித்ததா...கற்பனை அற்புதம் என்னமோ பண்ணுது

ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை
இந்த மண்ணில் தேவையே எழில் கொஞ்சும் பூவையே
அழகான கைகள் மீட்டும் வேளை...
ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை
ஒரு ராகம் வந்தாடும் வீணை நல்ல காதல் கொண்டாடும் பெண்மை


                    

Offline Global Angel

Re: ஜானகி ஹிட்ஸ்
« Reply #64 on: January 19, 2012, 11:10:26 PM »
படம்: பணக்காரன்
இசை: இளையராஜா
பாடியவர்: மனோ / S ஜானகி



நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணுதான்
பேரு விளங்க இங்கு வாழணும்
சோல வனத்தில் ஒரு ஜோடிக்குயில் போலத்தான்
காலம் முழுக்க சிந்து பாடணும்
ஒன்னுக்கொன்னு பக்கத்திலே
பொண்ணு புள்ள நிக்கையிலே
கண்ணுபடும் மொத்தத்திலே
கட்டழகன் அம்மாடி என்ன சொல்ல
(நூறு வருஷம்..)

உசில மணியாட்டம் ஒடம்பத்தான் பாரு
தெருவில் அசைஞ்சாடும் திருவாரூர் தேரு
ஓம குச்சிப்போல் புடிச்சாரு தாரம்
தாவி அணைச்சாக்கா தாங்காது பாரம்
இவரு ஏழு அடி
நடக்கும் ஏணியடி
நிலவை நின்னுக்கிட்டே தொட்டுடுவார் பாரு
மனைவி குள்ளமணி
உயரம் மூனு அடி
இரண்டும் இணைஞ்சிருந்தா கேளி பண்ணும் ஊரு
ரெட்ட மாட்டு வண்டி வரும்போது
நெட்டை குட்டை என்றும் இணையாது
இந்த ஒட்டகந்தான்
கட்டிக்கிட குட்ட வாத்தை புடிச்சான்
நூறு வருஷம் ஹே ஹே..
(நூறு பருஷம்...)

புருஷன் பொஞ்சாதி பொருதந்தான் வேணும்
பொருத்தம் இல்லாட்டி வருத்தம்தான் தோணும்
அமைஞ்சா அது போல கல்யாணம் பண்ணு
இல்ல நீ வாழு தனியாழா நின்னு
முதல்ல யோசிக்கணும்
பிறகு நேசிக்கணும்
மனசு ஏத்துக்கிட்டா சேத்துக்கிட்டு வாழு
உனக்கு தகுந்தபடி குணத்தில் சிறந்தபடி
இருந்தா ஊரறிய மாலை கட்டி போடு
சொத்து வீடு வாசல் இருந்தாலும்
ஹே சொந்தம் பந்தம் எல்லாம் அமைஞ்சாலும்
அட உள்ளம் ரெண்டும் ஒட்ட விட்டால்
கல்யாணம்தான் கசக்கும்
(நூறு வருஷம்...)
                    

Offline Global Angel

Re: ஜானகி ஹிட்ஸ்
« Reply #65 on: January 19, 2012, 11:11:59 PM »
படம்: ஊரு விட்டு ஊரு வந்து
இசை: இளையராஜா
பாடியவர்கள்: S ஜானகி, இளையராஜா


ஹேய் தந்தன தந்தன தந்தா
சொர்கமே என்றாலும்
அது நம் ஊரைப் போல வருமா?
அட என் நாடு என்றாலும்
அது நம் நாட்டுக் கீடா ஆகுமா?
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள்
தமிழ் போல் இனித்திடுமா?
(சொர்கமே..)

ஏரிக்கரை காத்தும் ஏலேலோ பாட்டும்
இங்கே ஏதும் கேட்கலையே
பாடும் குயில் சத்தம் ஆடும் மயில் நித்தம்
பார்க்க ஒரு சோலை இல்லையே
வெத்தலைய மடிச்சு மாமன் அதை கடிச்சி
துப்ப ஒரு வழியில்லையே
ஓடி வந்து குதிச்சு முங்கி முங்கி குளிக்க
அட ஒரு ஓடை இல்லயே
இது ஊரு என்ன ஊரு நம் ஊரு ரொம்ப மேல்
அட ஓடும் பல காரு வீண் ஆடம்பரம் பாரு
ஒரு தாகம் தீர்க்க அது மோரு
(சொர்கமே..)

மாடு கண்ணு மேய்க்க மேயிறதைப் பார்க்க
மந்தவெளி இங்கே இல்லையே
ஆடு புலி ஆட்டம் போட்டு விளையாட
அரசமரம் மேடை இல்லையே
காளை ரெண்டு பூட்டி கட்ட வண்டி ஓட்டி
கானம் பாட வழியில்லையே
தோழிகளை அணைச்சு சொல்லி சொல்லி ரசிச்சு
ஆட்டம் போட முடியலையே
ஒரு எந்திரத்தை போல அட இங்கு உள்ள வாழ்க்கை
இத எங்கே போயி சொல்ல மனம் இஷ்டப்படவில்லை
நம் ஊரை போல ஊரும் இல்லை
(சொர்கமே என்றாலும்..)


                    

Offline Global Angel

Re: ஜானகி ஹிட்ஸ்
« Reply #66 on: January 19, 2012, 11:12:48 PM »

படம் : அன்புள்ள ரஜினிகாந்த்
இசை : இளையராஜா
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்பிரமணியம், எஸ்.ஜானகி


தேன் பூவே பூவே வா தென்றல் தேட
பூந்தேனே தேனே வா தாகம் கூட
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நூறு ராகம் நெஞ்சோடுதான்
உனை நினைத்தேன் பூவே பூவே வா தென்றல் தேட


பனி விழும் புல்வெளியில் தினம்தினம் பொன் பொழுதில்
கனி விழும் உன் மடியில் கலந்திடும் உன் உறவில்
நானும் கம்பன் தான் கொஞ்சும் போது
கொஞ்சும் இன்பம் போல் வேறு ஏது
தேவதேவி என்னோடு தான்


(உனை நினைத்தேன்)

இடையினில் உன் விரல்கள் எழுதிடும் என் சுகங்கள்
அணைக்கையில் உன் உடலில் அழுந்திடும் என் நகங்கள்
மீண்டும் மீண்டும் நான் வேண்டும்போது
காதல் யோகம்தான் கட்டில் மீது
காணவேண்டும் உன்னோடு தான்

(உனை நினைத்தேன்)



                    

Offline Global Angel

Re: ஜானகி ஹிட்ஸ்
« Reply #67 on: January 19, 2012, 11:13:32 PM »
படம்: மௌன கீதங்கள்
இசை: கங்கை அமரன். *
பாடியவர்கள்: KJ ஜேசுதாஸ், S ஜானகி


மூக்குத்தி பூமேலே காத்து உக்காந்து பேசுதம்மா.... ம் ம்ம்
அது உக்காந்து பேசையிலே தேனு உள்ளூர ஊருதம்மா... ஆஹா..
அது ஏந்தான் புரியலையே அதை நான் தான் அறியலையே
ஒரு மோகம் ஒரு தாகம் இங்கு உன்னாலே இன்னேரம் உண்டானது
மூக்குத்தி பூமேலே காத்து உக்காந்து பேசுதய்யா.... ம் ம்ம்
அது உக்காந்து பேசையிலே தேனு உள்ளூர ஊர்றுதய்யா... ஆஹா..
அது ஏந்தான் புரியலையே அதை நான் தான் அறியலையே
ஒரு மோகம் ஒரு தாகம் இங்கு உன்னாலே இன்னேரம் உண்டானது
மூக்குத்தி பூமேலே காத்து உக்காந்து பேசுதம்ம....

மேற்க்காலே போகின்ற மேகங்களே
மண்ணில் வாருங்களேன் மழை தாருங்களேன் உடல் சூடாச்சி பாருங்களேன்
மேற்க்காலே போகின்ற மேகங்களே
மண்ணில் வாருங்களேன் மழை தாருங்களேன் உடல் சூடாச்சி பாருங்களேன்
மழை மேகம் நானாகவா மலர் தேகம் நீராட்டவா
மடி ஏந்தி தாலாட்டவா மனமார சீராட்டவா
வெரும் ஏக்கம் ஆகாதம்ம விட்டு போகாதம்ம
நான் கொஞ்சாம தீராதம்மா..... ஆமா....

கல்யாணம் கச்சேரி ஊர்கோலமும் ஒரு பூமாலையும்
திரு பொனூஞ்சலும் அடி நான் காண நாளாகுமோ
கல்யாணம் கச்சேரி ஊர்கோலமும் ஒரு பூமாலையும்
திரு பொனூஞ்சலும் அடி நான் காண நாளாகுமோ
திருனாளும் தானே வரும்
உனைதேடி தேனே வரும்
வரும்போது ஓலை வரும்
அது வந்தா மாலை வரும்
அட நானும் உன்போலத்தான்
அத கொண்டாடத்தான்
எதிர்பார்த்தேனே அன்னாளை தான்... ஆமா..


                    

Offline Global Angel

Re: ஜானகி ஹிட்ஸ்
« Reply #68 on: January 19, 2012, 11:14:38 PM »
படம்: சட்டம் என் கையில்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மலேசிய வாசுதேவன், S ஜானகி
வரிகள்: கண்ணதாசன்




ஆழக் கடலில் தேடிய முத்து
ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு
எங்க ராஜா கண்ணு
ஆயிரத்தில் ஒன்னே ஒன்னு
(ஆழக் கடலில்..)

மஞ்சலிட்டு பின்னல் இட்டு
மச்சான் தந்த பிஞ்சு மொழி
நெஞ்சிரண்டில் தொட்டில் கட்டி
பால் குடிக்கும் வண்ண கிளி
கோவிலில் ஏற்றினான் குத்துவிளக்கு
கண்ணா ராஜா ஐயா சின்னைய்யா
(அழக் கடலில்..)

வெள்ளி அலை நீச்சல் இட்டு
கட்டு மரம் சென்றால் என்ன
பெற்றெடுத்த பிள்ளை முகம்
நெஞ்சை விட்டு செல்லாதம்மா
ஓடம் நான் தென்றல் நீ என்னை நடத்து
கண்ணே பொண்ணே அம்மா சின்னம்மா
(ஆழக் கடலில்..)

சிப்பிக்குள்ளே முத்து வச்சு
உன்ன தந்த அப்பா கண்ணே
சிப்பியிலும் தங்க சிப்பி
உன்ன பெத்த அம்மா கண்ணே
நீந்தினோம் மூழ்கினோம் உன்னை எடுக்க
கண்ணா ராஜா ஐயா சின்னைய்யா
(ஆழக் கடலில்..)


                    

Offline Global Angel

Re: ஜானகி ஹிட்ஸ்
« Reply #69 on: January 19, 2012, 11:15:32 PM »
படம்: ஆனந்த ராகம்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: KJ ஜேசுதாஸ், S ஜானகி


மாமரச்சோலையில் பூமழை தேடுது
மழை மேகம் வர வேண்டும்
சில்லுன்னு காத்தாடிச்சா சந்தோஷம் சேருது..
சில்லுன்னு காத்தாடிச்சா சந்தோஷம் சேருது..

மேகம் கருக்குது மழை வரை பார்க்குது
வீசியடிக்குது காத்து காத்து

ஏன் நிறுத்திட்டீங்க? பாட்டு நல்லா இருக்கு
இன்னொரு தடவை பாடுங்களேன்
அது.. அது வந்து..
இந்த பாட்டு எதுக்கு உங்களுக்கு?
பாட்டு ரொம்ப நல்லா இருக்கு
கேட்கணும் போல ஆசையா இருக்கு
அட.. பாடுங்கண்ணா..

மேகம் கருக்குது மழை வரை பார்க்குது
வீசியடிக்குது காத்து
காத்து மழை காத்து
காத்து மழை காத்து
(மேகம் கருக்குது...)
ஒயிலாக மயிலாடும் அலை போல
மனம் பாடும்
(மேகம் கருக்குது...)

தொட்டு தொட்டு பேசும் சிட்டு
துள்ளி துள்ளி ஓடுவதென்ன
(தொட்டு தொட்டு...)
தென்றல் பட்டு ஆடும் மொட்டு
அள்ளி வந்த வாசம் என்ன
ஏதோ நெஞ்சில் ஆசை வந்து...
ஏதோ நெஞ்சில் ஆசை வந்து..
ஏதோ நெஞ்சில் ஆசை வந்து
என்னனம்மோ ஆகிப்போச்சு
சேராமல் தீராது
வாடைக் குளிரில் வாடுது மனசு
(மேகம் கருக்குது...)

பூவுக்குள்ள வாசம் வச்சான்
பாலுக்குள்ள நெய்யை வச்சான்
(பூவுக்குள்ள..)
கண்ணுக்குள்ள என்ன வச்சான்
பொங்குதடி என் பனசு
(கண்ணுக்குள்ள..)
பார்த்த கண்ணு சொக்கி சொக்கி
பைத்தியம்தான் ஆகிப்போச்சு
நீ..
நீ வாடி நீ வாடி
ஆசை மயக்கம் போடுற வயசு
(மேகம் கருக்குது...)


                    

Offline Global Angel

Re: ஜானகி ஹிட்ஸ்
« Reply #70 on: January 19, 2012, 11:17:08 PM »
படம்: கடல் மீன்கள்
இசை: இளையராஜா
பாடியவர்: ஜெயச்சந்திரன், எஸ்.ஜானகி


தாலாட்டுதே வானம்
தள்ளாடுதே மேகம்
தாளாமல் மடி மீது
தார்மீகக் கல்யாணம்
இது கார்கால சங்கீதம்

(தாலாட்டுதே)


அலை மீது ஆடும்
உள்ளம் எங்கும்
ஒரே ராகம்

நிலை நீரில் ஆடும்
மீன்கள் ரெண்டும்
ஒரே கோலம்

மேல்வானத்தில் ஒரு நட்சத்திரம்
கீழ்வானத்தில் ஒரு பெண் சித்திரம்

எண்ணம் ஒரு வேகம்
அதில் உள்ளம் தரும் நாதம்

(தாலாட்டுதே வானம்)


இரு கண்கள் மோதி
செல்லும் போதும்
ஒரே எண்ணம்

ஒரு சங்கில் தானே
பாலை உண்ணும்
ஒரே ஜீவன்

சொர்க்கத்திலே இது முடிவானது!
சொர்க்கம் என்றே இது முடிவானது!

காதல் ஒரு வேதம்
அது தெய்வம் தரும் கீதம்

(தாலாட்டுதே வானம்)



                    

Offline Global Angel

Re: ஜானகி ஹிட்ஸ்
« Reply #71 on: January 19, 2012, 11:17:48 PM »
படம்: கடலோரக் கவிதைகள்
இசை: இளையராஜா
பாடியோர்: ஜெயச்சந்திரன், எஸ்.ஜானகி



கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
பறிக்கச் சொல்லித் தூண்டுதே பவழமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ளே கூச்சம்

கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே
கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே


மனசு தடுமாறும் அது நெனச்சா நிறம் மாறும்
மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போடும்
நித்தம் நித்தம் உன் நெனப்பு நெஞ்சுக்குழி காயும்
மாடு ரெண்டு பாதை ரெண்டு வண்டி எங்கே சேரும்
பொத்தி வெச்சா அன்பு இல்ல சொல்லிப்புட்டா வம்பு இல்ல
சொல்லத்தானே தெம்பு இல்ல இன்பதுன்பம் யாரால


பறக்கும் திசையேது இந்தப் பறவை அறியாது
உறவோ தெரியாது அது உனக்கும் புரியாது
பாறையிலே பூ முளைச்சு பார்த்தவங்க யாரு
அன்பு கொன்ட நெஞ்சத்துக்கு ஆயுசு நூறு
காலம் வரும் வேளையிலே காத்திருப்பேன் பொன்மயிலே
தேதி வரும் உண்மையிலே சேதி சொல்வேன் கண்ணாலே


(கொடியிலே)




                    

Offline Global Angel

Re: ஜானகி ஹிட்ஸ்
« Reply #72 on: January 19, 2012, 11:18:31 PM »
படம்: கிழக்குச் சீமையிலே
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடல்: வைரமுத்து
பாடியோர்: ஜெயச்சந்திரன், எஸ்.ஜானகி




கத்தாழங் காட்டு வழி
கள்ளிப்பட்டி ரோட்டு வழி
வண்டி கட்டிப் போறவளே
வாக்கப்பட்டு போறவளே

வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா
வாக்கப்பட்ட பொண்ணு மனம் பின்னே போகுதம்மா
எட்டு மேல எட்டு வச்சு முன்னே போகுதம்மா
பொட்டு வச்ச பொண்ணு மனம் பின்னே போகுதம்மா


தாயி விருமாயி மனசு மருகுதம்மா
உழுத புழுதியிலும் உன் முகமே தெரியுதும்மா
தங்கம் போல நான் வளர்த்த தங்கச்சி பிரியக் கண்டு
கத்தாழங் காட்டுக்குள்ள காளைகளும் கதறுதம்மா
வாசப்படி கடக்கையிலே வரலையே பேச்சு
பள்ளப்பட்டி தாண்டிப்புட்டா பாதி உயிர் போச்சு

(வண்டி மாடு எட்டு வச்சு)


அண்ணே போய் வரவா அழுது போய் வரவா
மண்ணே போய் வர்வா மாமரமே போய் வரவா
அணில் வால் மீச கொண்ட அண்ணே உன்னைவிட்டு
புலிவால் மீசை கொண்ட புருசனோட போய் வரவா
சட்டப்படி ஆம்பளைக்கு ஒத்த இடம்தானே
தவளைக்கும் பொம்பளைக்கும் ரெண்டு இடம்தானே

(வண்டி மாடு எட்டு வச்சு)



                    

Offline Global Angel

Re: ஜானகி ஹிட்ஸ்
« Reply #73 on: January 19, 2012, 11:19:11 PM »
படம்: காற்றினிலே வரும் கீதம்
இசை: இளையராஜா
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்: ஜெயச்சந்திரன், எஸ்.ஜானகி




ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய்
உன் பார்வையால் எனை வென்றாய் என் உயிரிலே நீ கலந்தாய்

(ஒரு வானவில்)


வளர் கூந்தலின் மணம் சுகம் இதமாகத் தூங்கவா
வன ராணியின் இதழ்களில் புது ராகம் பாடவா
மடி கொண்ட தேனை மனம் கொள்ள வருகின்ற முல்லை இங்கே
கலைமானின் உள்ளம் கலையாமல் களிக்கின்ற கலைஞன் எங்கே
கலைகள் நீ கலைஞன் நான் கவிதைகள் பாடவா

(ஒரு வானவில்)


உனக்காகவே கனிந்தது மலைத்தோட்ட மாதுளை
உனக்காகவே மலர்ந்தது கலைக் கோயில் மல்லிகை
இனிக்கின்ற காலம் தொடராதோ இனியெந்தன் உள்ளம் உனது
அணைக்கின்ற சொந்தம் வளராதோ இனியெந்தன் வாழ்வும் உனது
தொடர்கவே வளர்கவே இது ஒரு காவியம்

(ஒரு வானவில்)



                    

Offline Global Angel

Re: ஜானகி ஹிட்ஸ்
« Reply #74 on: January 19, 2012, 11:20:14 PM »
படம்: அந்த ஏழு நாட்கள்
இசை: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடியவர்கள்: ஜெயச்சந்திரன், எஸ்.ஜானகி



சப்த ஸ்வரதேவி உணரு
இனி என்னில் வர தானமருளு
நீ அழகில் மமமாவில் வாழும்
என் கருவில் ஒளி தீபமேற்று
சப்த ஸ்வரதேவி உணரு

கவிதை அரங்கேறும் நேரம்
மலர் கணைகள் பரிமாறும் தேகம்
இனி நாளும் கல்யாண ராகம்
இந்த நினைவு சங்கீதமாகும்
கவிதை அறங்கேறும் நேரம்
மலர் கணைகள் பரிமாறும் தேகம்

பார்வை உன் பாதம் தேடி
வரும் பாவை என் ஆசை கோடி
இனி காமன் பல்லாக்கில் ஏறி
நாம் கலப்போம் உல்லாச ஊரில்
உன் அங்கம் தமிழோடு சொந்தம்
அது என்றும் திகட்டாத சந்தம்

(கவிதை அரங்கேறும்)


கைகள் பொன்மேனி கலந்து
மலர்ப்பொய்கை கொண்டாடும் விருந்து
இனி சொர்க்கம் வேறொன்று எதற்கு
எந்த சுகமும் ஈடில்லை இதற்கு
மனம் கங்கை நதியான உறவை
இனி எங்கே இமை மூடும் நிலவை


(கவிதை அரங்கேறும்)


நீரில் நின்றாடும் போதும்
சுடும் நெருப்பாய் என் தேகம் ஆகும்
அது நேரில் நீ வந்த மாயம்
இந்த நிலைமை எப்போது மாறும்
என் இளமை மழை மேகமானால்
உன் இதயம் குளிர் வாடை காணும்

(கவிதை அரங்கேறும்)