Author Topic: ஜானகி ஹிட்ஸ்  (Read 30295 times)

Offline Global Angel

ஜானகி ஹிட்ஸ்
« on: January 19, 2012, 03:38:22 PM »
படம்: சங்கர் குரு
இசை: சந்திரபோஸ்
பாடியவர்கள்: K.J.ஜேசுதாஸ், ஜானகி


சின்ன சின்னப் பூவே
நீ கண்ணால் பாருப் போதும்
தொட்டுத் தொட்டுப் பேசு
என் துன்பம் எல்லாம் தீரும்
கண்ணே உன் கைதொட்டால்
காஞ்ச கொடி பிஞ்சு விடும்
பட்ட மரம் பாலூறும்
பாகற்காய் தேனூறும்

(சின்ன சின்னப் பூவே)

உலகத்தில் பூவெல்லாம் உன் போல அழகில்ல
நானும் உன் அம்மாவும் பண்ணாத தவமில்ல
தென்பாண்டி மன்னவனோ முழுகித்தான் முத்தெடுத்தான்
தேனே உன் அம்மாவோ முழுகாம முத்தெடுத்தா
கண்ணே தெய்வம் கண்டேன் உந்தன் கண்ணே சந்நிதி
உன் முத்தம் பட்ட எச்சில் பட்டா கொஞ்சம் நிம்மதி

(சின்ன சின்னப் பூவே)

பாப்பா நீ இல்லாம பசி தூக்கம் வாராது
உன் பேச்சைக் கேட்காம ஒரு நாளும் விடியாது
நீ உண்ணப் பால் கிண்ணம் போதாது பொன்மானே
நிலவென்னும் கிண்ணத்தை நான் கொண்டு வருவேனே
பூவும் பூவும் உன்னைப் பார்த்துப் பேசிக் கொண்டது
காட்டில் ஓடும் ஓடைக் கூட உன் பேர் சொன்னது

(சின்ன சின்னப் பூவே)

                    

Offline Global Angel

Re: ஜானகி ஹிட்ஸ்
« Reply #1 on: January 19, 2012, 03:39:38 PM »
படம்: கோபுர வாசலிலே
இசை: இளையராஜா
பாடியவர்: ஜானகி

 


தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா
வருவாயோ வாராயோ
ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே
என் நெஞ்சமே உன் தஞ்சமே

(தாலாட்டும் பூங்காற்று)

நள்ளிரவில் நான் கண்விழிக்க
உன் நினைவில் என் மெய்சிலிர்க்க
பஞ்சணையில் நீ முள் விரித்தாய்
பெண் மனதை நீ ஏன் பறித்தாய்
ஏக்கம் தீயாக ஏதோ நோயாக
காணும் கோலங்கள் யாவும் நீயாக
வாசலில் மன்னா உன் தேர் வர ஆடுது பூந்தோரணம்

(தாலாட்டும் பூங்காற்று)

எப்பொழுதும் உன் சொப்பனங்கள்
முப்பொழுதும் உன் கற்பனைகள்
சிந்தனையில் நம் சங்கமங்கள்
ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள்
காலை நான் பாடும் காதல் பூபாளம்
காதில் கேட்காதோ கண்ணா எந்நாளும்
ஆசையில் நாள்தோறும் நான் தொழும் ஆலயம் நீயல்லவா

(தாலாட்டும் பூங்காற்று)


 
                    

Offline Global Angel

Re: ஜானகி ஹிட்ஸ்
« Reply #2 on: January 19, 2012, 03:40:57 PM »
படம் : உதயகீதம்
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ் ஜானகி
இசை: இளையராஜா



தேனே தென்பாண்டி மீனே இசைத்தேனே இசைத்தேனே
மானே இள மானே
நீதான் செந்தாமரை தாலேலோ நெற்றி மூன்றாம்பிறை
ஆரீராரோ

(தேனே)

மாலை வெய்யில் வேளையில் மதுரை வரும் தென்றலே
ஆடி மாதம் வைகையில் ஆடி வரும் வெள்ளமே
நஞ்சை புஞ்சை நாலும் உண்டு நீயும் அதை ஆளலாம்
மாமன் வீட்டு மயிலும் உண்டு மாலை கட்டிப் போடலாம்
ராஜா நீதான் நெஞ்சத்திலே நிற்கும் பிள்ளை

(தேனே)

பால் குடுத்த நெஞ்சிலே ஈரம் இன்னும் காயலே
பால் மனத்தைப் பார்க்கிறேன் பிள்ளை உந்தன் வாயிலே
பாதை கொஞ்சம் மாறிப் போனால் பாசம் விட்டுப் போகுமா
தாழம் பூவை தூர வைத்தால் வாசம் விட்டு போகுமா
ராஜா நீதான் நான் எடுத்த முத்துப் பிள்ளை

(தேனே)


                    

Offline Global Angel

Re: ஜானகி ஹிட்ஸ்
« Reply #3 on: January 19, 2012, 03:42:05 PM »

படம் : கிளி பேச்சு கேக்கவா
இசை: இளையராஜா
பாடியவர் : ஜானகி


அன்பே வா அருகிலே...
என் வாசல் வழியிலே...
உல்லாச மாளிகை ..மாளிகை..
இங்கே ஓர் தேவதை ...தேவதை..
நீதானே வேண்டும் என்று ஏங்கினேன்...
நாள் தோறும் முள்ளின் மீது தூங்கினேன்..
அன்பே வா அருகிலே...
என்வாசல் வழியிலே..


பொற்சதங்கை சத்தமிட...
சிற்பம் ஒன்று பக்கம்வர...
ஆசை தோன்றாதோ ....
விற்புருவம் அம்புவிட...
வட்ட நிலா கிட்டவர ..
ஆவல் தூண்டாதோ ...
வானம் நீங்கி வந்த...
மின்னற்கோலம் நானே,
அங்கம்யாவும் மின்னும்..
தங்கப்பாளம் தானே.
தினம்தினம் உனக்கென உருகிடும் என் இதயமே!


மந்திரமோ தந்திரமோ ..
அந்தரத்தில் வந்து நிற்கும்..
தேவி நான் தானே,
மன்னவனே உன்னுடைய ...
பொன்னுடலை பின்னிக்கொள்ளும்...
ஆவி நான் தானே,
என்னைச்சேர்ந்த பின்னால்..
எங்கே போகக்கூடும் ...
இங்கே வந்த ஜீவன்...
எந்தன் சொந்தம் ஆகும் ,
தினம் தினம் உனக்கென உருகிடும் என் இதயமே! (அன்பேவா)



                    

Offline Global Angel

Re: ஜானகி ஹிட்ஸ்
« Reply #4 on: January 19, 2012, 03:43:35 PM »
படம்: ஆனந்த கும்மி
இசை: இளையராஜா
பாடியவர்: ஜானகி



ஆனந்தக் கும்மியடி கும்மியடி
வானமெல்லாம் கேக்கட்டும்
இந்திரரும் சூரியரும் எட்டியெட்டிப் பாக்கட்டும்
தங்க ஜமுக்காளம் தரையெல்லாம் விரிச்சிருக்க
மதுர மல்லிகைப்பூ மண்டபத்தில் இறைச்சிருக்க
முத்துமனித் தோரணங்கள் வீதியெல்லாம் உயிர்த்திருக்க
அன்னங்களும் குடைப் பிடிக்கும் அலங்கார மேடையிலே
கல்யாணக் குயிலிரண்டு கச்சேரிப் பாடட்ட்டும்
கல்யாணக் குயிலிரண்டு கச்சேரிப் பாடட்ட்டும்

ஒரு கிளி உருகுது உரிமையில் பழகுது ஓ மைனா மைனா
குறும்புகள் தொடருது அரும்புகள் வளருது ஓ மைனா மைனா
தளிரிது மலருது தானா இது ஒரு தொடர்கதை தானா
இரு மனம் இணையுது இரு கிளி தழுவுது ஓ மைனா மைனா

(ஒரு கிளி உருகுது)

நிலவெரியும் இரவுகளில் ஓ மைனா ஓ மைனா
மணல்வெளியில் சடுகுடுதான் ஓ மைனா ஓ மைனா
கிளிஞ்சல்களே உலையரிசி
இவளல்லவா இளவரசி
தேனாடும் பூவெல்லாம் பாய் போடும்
ஒரு கிளி மடியினில் ஒரு கிளி உறங்குது ஓ மைனா ஓ மைனா

(ஒரு கிளி உருகுது)

இலைகளிலும் கிளைகளிலும் ஓ மைனா ஓ மைனா
இரு குயில்கள் பெயரெழுதும் ஓ மைனா ஓ மைனா
வயல்வெளியில் பலக் கனவை
விதைக்கிறதே சிறு பறவை
நீரோடை எங்கெங்கும் பூவாடை
மலர்களின் வெளிகளில் இரு பிறை வளருது ஓ மைனா ஓ மைனா

(ஒரு கிளி உருகுது)
                    

Offline Global Angel

Re: ஜானகி ஹிட்ஸ்
« Reply #5 on: January 19, 2012, 03:44:32 PM »
படம்: கோழி கூவுது
இசை: இளையராஜா
பாடியவர்கள்: கிருஷ்ண சந்தர், ஜானகி


பெண்: ஏதோ மோகம் ஏதோ தாகம்
நேற்று வரை நெனக்கலையே
ஆசை விதை மொளக்கலையே
சேதி என்ன வனக்கிளியே வனக்கிளியே

ஆண்: ஏதோ மோகம் ஏதோ தாபம்
நேற்று வரை நெனக்கலையே
ஆசை விதை மொளக்கலையே
சேதி என்ன வனக்கிளியே வனக்கிளியே

பெண்: தாழம்பூவு ஈரமாச்சு தலையில் சூட நேரமாச்சு
தாழம்பூவு ஈரமாச்சு தலையில் சூட நேரமாச்சு
சூடு கண்டு ஈரமூச்சு தோளைச் சுட்டு காயமாச்சு
சூடு கண்டு ஈரமூச்சு தோளைச் சுட்டு காயமாச்சு

ஆண்: பார்வையாலே நூறுப் பேச்சு வார்த்தை இங்க்கு மூர்ச்சையாச்சு
பார்வையாலே நூறுப் பேச்சு வார்த்தை இங்க்கு மூர்ச்சையாச்சு
போதும் போதும் காமதேவனே மூச்சு வாங்குதே ரெண்டு ஜீவனே

(ஏதோ மோகம்)

ஆண்: பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து நெஞ்சுக்குள்ள சாரக்காத்து
பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து நெஞ்சுக்குள்ள சாரக்காத்து
தொட்ட பாகம் தொட்டுப் பார்த்து சாய்வதென்ன கண்ணுப் பூத்து
தொட்ட பாகம் தொட்டுப் பார்த்து சாய்வதென்ன கண்ணுப் பூத்து

பெண்: அக்கம் பக்கம் சுத்திப் பாத்து தலைக்கு மேல தண்ணி ஊத்து
அக்கம் பக்கம் சுத்திப் பாத்து தலைக்கு மேல தண்ணி ஊத்து
விடியச் சொல்லி கோழி கூவுது இந்த வேளையில் நெஞ்சு தாவுது

(ஏதோ மோகம்)


                    

Offline Global Angel

Re: ஜானகி ஹிட்ஸ்
« Reply #6 on: January 19, 2012, 03:46:37 PM »
திரைப்படம் : செண்பகமே செண்பகமே
பாடலைப்பாடியோர் : ஜானகி , மனோ
இசை : இளையராஜா



ஆண் :வாசலிலே பூசணிப்பூ வச்சிப்புட்டா வச்சிப்புட்டா நேசத்திலே
என் மனசை தச்சிப்புட்டா தச்சிப்புட்டா
பூவும் பூவும் ஒன்னு கலந்தது இப்போது
தேனும்பாலும் பொங்கி வழியுது இப்போது

பெண்: வாசலிலே பூசணிப்பூ வச்சதென்ன வச்சதென்ன
நேசத்திலே என் மனசை தச்சதென்ன தச்சதென்ன



பெண்: பிரிச்ச போதும் பிரியவில்லையே சொந்தம் நானே
வழிய மறந்த குயிலும் சேர்ந்தது ஆஆஆ

ஆண்: கோலம்போட்டு சாடை சொன்னது நானே
கோடு நமக்கு யாரு போட்டது..

பெண்: நெஞ்சுக்குள்ளே நெஞ்ச வச்சு உள்ளதெல்லாம் கண்டுகிட்டேன்..

நெத்தியிலே பொட்டுவச்சு உங்களைத்தான் தொட்டுக்கிட்டேன்..

ஆண்: நானும் நீயும் ஒன்னாசேந்தா நாளும் நாளும் சந்தோஷம்..

பெண்: ராகம் தாளம் சேரும் நேரம் ஆனந்தம் பாடும் சங்கீதம்..

(வாசலிலே பூசணிப்பூ )



ஆண்: மீண்டும் மீண்டும் கூடி சேருது பொன்னிஆறு

மோகத்தோடு கூடி பாடுது ஆஆஅ

பெண்: கேட்டுகேட்டு கிறங்கத்தோணுது உங்க பாட்டு..

கேள்வி போல என்னை வாட்டுது

ஆண்: ஆத்து வெள்ளம் மேட்ட விட்டு

பள்ளத்துக்கு ஓடிவரும்

ஆசையிது தேடிக்கிட்டு ஆனந்தமாய் பாடிவரும்

பெண்: ஏதோ ஒன்னை சொல்லிச்சொல்லி

என்னை இப்ப கிள்ளாதே

பெண்: போதும் போதும் கண்ணால்

என்ன கட்டி இழுக்கற செண்பகமே!( வாசலிலே பூசணிப்பூ)



                    

Offline Global Angel

Re: ஜானகி ஹிட்ஸ்
« Reply #7 on: January 19, 2012, 03:47:59 PM »
திரைப்படம் : தெய்வப்பிறவி
பாடலைப்பாடியவர்கள் : cs ஜெயராமன், ஜானகி
பாடலைஇயற்றியவர்: உடுமலை நாராயன கவி
இசையமைத்தவர் : ஆர். சுதர்சன்



ஆண் : அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம் தங்கம்
பெண் :ஆஆஆஅ
ஆண்: அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம் தங்கம்
அம்புவியின் மீது நாம்
அணி பெரும் ஓர் அங்கம்


இன்பம் தரும் தேன்நிலவு
இதற்குண்டோ ஆதங்கம்
ஏகாந்த வேளை வெக்கம் ஏனோ

வா என் பக்கம் ( ஏகாந்தா வேளை)

(அன்பாலே தேடிய)

உடல்நான் ஆ உரம் நீ -ம்ஹூம்..

உடல் நான் அதில் உளம் நீ
என உறவு கொண்டோம் நேர்மையால்
ஆஆஅ (உடல்நான்)
கடல்நிலவாய் காட்சியிலே கலந்து நின்றோம்
ப்ரேமையால்
இருவரும் : ஆஆஆஆஆ
குணம் நிறை மாற்றறியா பொன்னே
சொல் ஏன் ஜாலம்
போனால் வராது இது போல
காலம் இனி
ஆஆஆஅ(போனால் வராது)
( அன்பாலே தேடிய)


                    

Offline Global Angel

Re: ஜானகி ஹிட்ஸ்
« Reply #8 on: January 19, 2012, 07:32:51 PM »
திரைப்படம்: சட்டம் ஒரு இருட்டறை
பாடலைப்பாடியவர்கள் : SNசுரேந்தர் , s.ஜானகி
இசையமைத்தவர்கள் : சங்கர் கணேஷ்




தனிமையிலே ஒரு ராகம் ஒரு தாளம் உருவாகும்
இனிமையின் கவிதைகள் பிறந்தது
இளைமையின் நினைவுகள் பறந்தது

ஹோ நெஞ்சமே உன்னிடம் இன்று தான் மாற்றமே
கல்லான நெஞ்சங்கள் கூட இளம் பெண்ணாலே பூவாக மாறும்
இனி நான் காணும் இன்பங்கள்
ஆறு போல ஓடவேண்டும்(தனிமையிலே )

என் தேவனே என் மனம் உன்னிடம் தஞ்சமே(2)
என் உள்ளப் பொன்வாசல் தேடி
இசை காற்றாக என்னோடு கூடி
புது ஊற்றாக இன்பங்கள்
ஊர வேண்டும் சேரவேண்டும்(தனிமையிலே )

ஹே தென்றலே என் மனம் வானிலே போகுதே (2)
எண்ணாத இன்பங்கள் யாவும் இனி என்னாளும் உன்னோடு வாழும்
பனி நீராட்டும் இந்நேரம்
பாடவேண்டும் கூட வேண்டும்(தனிமையிலே)


                    

Offline Global Angel

Re: ஜானகி ஹிட்ஸ்
« Reply #9 on: January 19, 2012, 07:34:19 PM »
படம்: வறுமையின் நிறம் சிவப்பு
இசை: MS விஸ்வநாதன்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S. ஜானகி
வரிகள்: கண்ணதாசன்



தந்தன தத்தன தய்ய்ன தத்தன தனன தத்தன தான தய்யன தந்தானா
சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி
லலலலலல லலலலலல லாலலால லாலாலாலா லாலா
சிந்தையிருக்குது சந்தமிருக்குது கவிதைபாட நேரமில்லடி ராஜாத்தி
சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி
சிந்தையிருக்குது சந்தமிருக்குது கவிதைபாட நேரமில்லடி ராஜாத்தி

தனனா.. சந்தங்கள்..
நனனா.. நீயானால்
ரீசரி.. சங்கீதம்
ஹ்ம்ஹ்ம்.. நானாவேன்
சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன்
(சிப்பியிருக்குது..)

நனனானானா.. Come On say it once again..
நனனானானா .. சிரிக்கும் சொர்க்கம்
தனனானனானானா.. தங்கத்தட்டு எனக்கு மட்டும்
தானைதானைதானா.. தேவை பாவை பார்வை..
தத்தனதன்னா.. நினைக்க வைத்து
நனனானானா.. நெஞ்சில் நின்று நெருங்கி வந்து
நனனனானானா தனானா லலாலலா நனானா
Beautiful..
மயக்கம் தந்தது யாரு தமிழோ அமுதோ கவியோ
(சிப்பியிருக்குது..)

இப்போ பார்க்கலாம்..
தனனானா தனனானானா
ம்ம்.. மழையும் வெயிலும் என்ன
தன்னானா நானா நானா
உன்னை கண்டால் மலரும் முள்ளும் என்ன
தனனான தனனான தானா
அம்மாடியோவ்..
தனனான தனனான தானா
ரதியும் நாடும் அழகில் ஆடும் கண்கள்
சபாஷ்..
கவிதை உலகம் கெஞ்சும்
உன்னை கண்டால் கவிஞர் இதயம் கெஞ்சும்
கொடுத்த சந்தங்களில் என் மனதை நீயறிய
நானுரைத்தேன்..
கொடுத்த சந்தங்களில் என் மனதை நீயறிய
நானுரைத்தேன்..
                    

Offline Global Angel

Re: ஜானகி ஹிட்ஸ்
« Reply #10 on: January 19, 2012, 07:35:35 PM »
படம்: தளபதி
பாடல்: வாலி
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி
இசை: இளையராஜா


ஆண்: சுந்தரி கண்ணால் ஒரு சேதி இந்நாள் நல்ல தேதி

பெண்: என்னையே தந்தேன் உனக்காக ஜென்மமே கொண்டேன் அதற்காக

ஆண்: நான் உனை நீங்க மாட்டேன் நீங்கினால் தூங்க மாட்டேன்
சேர்ந்ததே நம் தேகமே

(சுந்தரி கண்ணால்)

பெண்: வாய் மொழிந்த வார்த்தை யாவும் காற்றில் போனால் நியாயமா
பாய் விரித்து பாவை பார்த்த காதல் இன்பம் மாயமா

ஆண்: வாள் பிடித்து நின்றால் கூட நெஞ்சில் உந்தன் ஊர்வலம்
போர்க்களத்தில் சாய்ந்தால் கூட ஜீவன் உன்னை சேர்ந்திடும்

பெண்: தேனிலவு நான் வாட ஏனிந்த சோதனை

ஆண்: வானிலவை நீ கேளு கூறுமென் வேதனை

பெண்: எனைத்தான் அன்பே மறந்தாயோ

ஆண்: மறப்பேன் என்றே நினைத்தாயோ

(சுந்தரி கண்ணால்)

பெண்: சோலையிலும் முட்கள் தோன்றும் நானும் நீயும் நீங்கினால்
பாலையிலும் பூக்கள் பூக்கும் நான் உன் மார்பில் தூங்கினால்

ஆண்: மாதங்களும் வாரம் ஆகும் நானும் நீயும் கூடினால்
வாரங்களும் மாதமாகும் பாதை மாறி ஓடினால்

பெண்: கோடி சுகம் வாராதோ நீ எனை தீண்டினால்

ஆண்: காயங்களும் ஆறாதோ நீ எதிர் தோன்றினால்

பெண்: உடனே வந்தால் உயிர் வாழும்

ஆண்: வருவேன் அந்நாள் வரக் கூடும்

(சுந்தரி கண்ணால்)
                    

Offline Global Angel

Re: ஜானகி ஹிட்ஸ்
« Reply #11 on: January 19, 2012, 07:36:28 PM »
படம் : தர்மயுத்தம்
இசை: இளையராஜா
பாடல்: வல்லபன்
பாடியவர்: மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி


ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி
பொன்மான் விழி தேடி
மேளம் கொட்டி மேடை கட்டி
பாடுதே மங்களம் நாடுதே சங்கமம

குங்குமத் தேரில் நான் தேடிய தேவன்
சீதா புகழ் ராமன்
தாளம் தொட்டு ராகம் தொட்டு
பாடுதே மங்களம் நாடுதே சங்கமம


காதல் நெஞ்சில்..ஹேஏஏஎ
மேள தாளம்..ஹோஓஒ (2)
காலை வேளை பாடும் பூபாளம்
மன்னா இனி உன் தோளிலே
படரும் கொடி நானே
பருவப் பூ தானே
பூ மஞ்சம் உன் மேனி எந்நாளில் அரங்கேறுமோ

(குங்கும தேரில்)

தேவை யாவும் ஹேஏஏஏ
தீர்ந்த பின்னும் ஹோஓஒ (2)
பூவை நெஞ்சில் நாணம் போராடும்

ஊர்கூடியே உறவானதும்
தருவேன் பலநூறு
பருகக் கனிச்சாறு
தளிராடும் என் மேனி தாங்காது உன் மோகம்

(ஆகாய கங்கை)
                    

Offline Global Angel

Re: ஜானகி ஹிட்ஸ்
« Reply #12 on: January 19, 2012, 07:37:45 PM »
படம் : நான் அடிமை இல்லை
இசை : விஜய் ஆனந்த்
பாடியவர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், ஜானகி



ஒரு ஜீவன் தான் உன் பாடல்தான் ஓயாமல் இசைக்கின்றது
இரு கண்ணிலும் உன் ஞாபகம் உறங்காமல் இருக்கின்றது
பாசங்களும் பந்தங்களும் பிரித்தாலும் பிரியாதது
காலங்களும் நேரங்களும் கலைத்தாலும் கலையாதது

..........ஒரு ஜீவன் தான்..........

ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உனைச் சேருவேன்
வேறாரும் நெருங்காமல் மனவாசல் தனை மூடுவேன்
உருவானது நல்ல சிவரஞ்சனி
உனக்காகத்தான் இந்த கீதாஞ்சலி
ராகங்களின் ஆலாபனை
மோகங்களின் ஆராதனை
உடலும் மனமும் தழுவும் பொழுதில் உருகும்

..........ஒரு ஜீவன் தான்..........

காவேரி கடல்சேர அணைதாண்டி வரவில்லையோ
ஆசைகள் அலைபாய ஆனந்தம் பெறவில்லையோ
வரும் நாளெல்லாம் இனி மதனோற்சவம்
வளையோசைதான் நல்ல மணிமந்திரம்
நாந்தானைய்யா நீலாம்பரி
தாலாட்டவா நடுராத்திரி
சுருதியும் லயமும் சுகமாய் உருகும் தருணம்

..........ஒரு ஜீவன் தான்..........


                    

Offline Global Angel

Re: ஜானகி ஹிட்ஸ்
« Reply #13 on: January 19, 2012, 07:38:44 PM »

படம்: நிறம் மாறாத பூக்கள்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி



முதல் முதலாக காதல் டூயட் பாட வந்தேனே
(முதல்..)
என் காதல் பைங்கிளியே நீ பறந்து போகாதே
(முதல்..)

சீதா என் கொடியே கண் பாரம்மா
ஆதரம் நீயில்லாமல் வேறேதம்மா
(சீதா..)
ஆசையுடன் நம்பி வந்த பெண்ணை இன்று
மோசம் செய்த துரோகியே
ஓஓஓ.. உன் கோபம் தேவைதானா அன்பே ஆருயிரே
அது யாரந்த பெண்
ஒரு நடிகையம்மா
அந்த கழுதையை நீ கொஞ்சி அணைப்பது தவறு
(முதல்..)
(முதல்..)

ஜீனத் என் கனவில் வந்தால் உன் போலவே
சிங்கார பாவை உந்தன் வடிவாகவே..
(ஜீனத்..)
ஜீனத்தை போல் என்னை எண்ணி வந்து
பாட்டு பாடும் துரோகியே
ஐயய்யோ.. சும்மாதான் ஜாடை சொன்னேன்
கண்ணே கண்மணியே
என்னை போல் ஒரு பெண்
இந்த உலகில் இல்லை
ஒரு நடிகையை போல் என்னை பார்ப்பது தவறு.
(முதல்..)
(முதல்..)


                    

Offline Global Angel

Re: ஜானகி ஹிட்ஸ்
« Reply #14 on: January 19, 2012, 07:39:38 PM »

படம்: அலைகள் ஓய்வதில்லை
இசை: இளையராஜா
பாடியவர்: S ஜானகி
பாடலாசிரியர்: வைரமுத்து



புத்தம் புது காலை
பொன்னிற வேளை
என் வாழ்விலே
தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும்
எந்நாளும் ஆனந்தம்
(புத்தம்...)

பூவில் தோன்றும் வாசம்
அதுதான் ராகமோ
இளம் பூவை நெஞ்சில் தோன்றும்
அதுதான் தாளமோ
மனதின் ஆசைகள்
மலரின் கோலங்கள்
குயிலோசையின் பரிபாஷைகள்
அதிகாலையின் வரவேற்புகள்
(புத்தம்....)

வானில் தோன்றும் கோலம்
அது யார் போட்டதோ
பனி வாடை வீசும் காற்றின்
சுகம் யார் தந்ததோ
வயதில் தோன்றிடும்
நினைவில் ஆனந்தம்
வளர்ந்தாடுது இசைபாடுது
வழிந்தோடுது சுவைகூடுது
(புத்தம்...)