Author Topic: முயற்சி யாதெனில்  (Read 526 times)

Offline thamilan

முயற்சி யாதெனில்
« on: March 28, 2016, 08:00:17 PM »
சிறு பறவையொன்று
தன் ஒற்றைச் சிறகினில்
இந்த மொத்த உலகையும்
சுருட்டிக்கொள்ள முயற்சிக்கிறது

பெண் குழந்தை ஒன்று
மின்னல் கீற்றைக் கொண்டு
மெழுகுவர்த்தியை கொளுத்தப் பார்க்கிறது

வாலிபன் ஒருவன்
விமானத்தை விட வேகமாக
ஓட வேண்டும் என எத்தனிக்கிறான்

பேருந்தில் வயோதிபர் ஒருவர்
சீறி வரும் சிறுநீரை
வீடு சென்றடையும் வரை
அடக்க முயற்சிக்கிறார்

இவை அனைத்தும் முடியாதென்றாலும்
முயற்சி அற்புதமானது
அழகானது
ஒரு நாள் வெல்லக் கூடியது

கவிதையும் இது போன்றதொரு
முயற்சி தான்
வாருங்கள் முயற்சிப்போம்
முடியும்   
« Last Edit: March 29, 2016, 07:37:50 AM by thamilan »

Offline SweeTie

Re: முயற்சி யாதெனில்
« Reply #1 on: March 29, 2016, 02:00:34 AM »
முயற்சி உடையோர் வளர்ச்சி  அடைவர் ..என்றொரு 
புது மொழி படைப்போம்.   வாழ்த்துக்கள் 

Offline PraBa

  • Sr. Member
  • *
  • Posts: 373
  • Total likes: 388
  • Total likes: 388
  • Karma: +0/-0
  • வாழிடம் வானமெனில் நனைவது சாத்தியமில்லை ....
Re: முயற்சி யாதெனில்
« Reply #2 on: March 29, 2016, 03:30:14 PM »
சிறப்பான முயற்சி
  வாழ்த்துக்கள் நண்பரே..,.
Palm Springs commercial photography