Author Topic: ~ வெஜிட்டபிள் ரோல் ~  (Read 324 times)

Offline MysteRy

~ வெஜிட்டபிள் ரோல் ~
« on: March 26, 2016, 08:46:05 PM »
வெஜிட்டபிள் ரோல்



தேவையான பொருட்கள்

மைதா மாவு – 1 கப்
உப்பு – தேவையான அளவு
நீர் – தேவையான அளவு
வெங்காயம் – 1 கப்(மெல்லியதாக நறுக்கியது)
காரட் – 1 கப் (துருவியது)
பச்சை மிளகாய் – 1 கப்(பொடியாக நறுக்கியது)
முட்டை கோஸ் – 1 கப் (மெல்லியதாக நறுக்கியது)
சோயா சாஸ் – 1 கரண்டி
தக்காளி சாஸ் – 1 கரண்டி
மிளகாய் தூள் – தேவைக்கு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

ரோல் ஷீட்
ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, தேவையான அளவு நீர் மற்றும் உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பிசைவது போல் நன்கு பிசையவும்.பின்பு அதனை மூடி 10 நிமிடம் வைக்கவும். 10 நிமிடம் கழித்து மாவை 8 சம துண்டுகளாக வெட்டி அதனை சிறிய உருண்டைகளாக உருட்டவும்.பின்பு அதனை சப்பாத்தி உருட்டுக் கட்டையால் மெல்லியதாக தேய்த்து வட்ட வடிவமாகவோ அல்லது சதுரமாகவோ எடுக்கவும்.இப்போது ரோல் ஷீட் தயார்.
பின்பு அழுத்தி காய்கறிகளில் உள்ள நீரை வெளியேற்றவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த்தும் வெங்காயத்தை போட்டு 2-3 நிமிடம் வதக்கவும்.பின்பு துருவிய காரட், பச்சை மிளகாய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 5-6 நிமிடம் வதக்கவும். பின்பு சோயா சாஸ், தக்காளி சாஸ் மற்றும் மிளகாய்த்தூள் சேர்க்கவும். 2-3 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விடவும்.
ஒரு கரண்டி மைதா மாவை எடுத்து தண்ணீர் சேர்த்து பிசையவும்.பின்பு முதலில் செய்து வைத்திருந்த ரேல் ஷீட்டை எடுத்து அதில் ஒரு ஓரத்தில் வதக்கி வைத்துள்ள காய்கறியில் 1 கரண்டி வைக்கவும்.
அந்த ஓரத்தை பாதி வரை மடிக்கவும்.
அதன் இரு முனையிலும் பிசைந்து வைத்திருக்கும் மைதா மாவை எடுத்து ஒட்டி விடவும்.
பின்பு இரு முனைகளையும் மடித்து அழுத்தவும்.
பின்பு மறு முனையையும் மடிக்கவும். உள்ளே வைத்திருக்கும் காய்கறிகள் வெளியே வராமல் முனைகளை சரியாக மடிக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் இந்த ரோல்களை போட்டு பொரிக்கவும். முக்கால்வாசி வெந்தவுடன் அதனை எடுத்து சிறிது நேரம் ஆற வைக்கவும்.பின்பு மீண்டும் அதனை சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாகும் வரை பொரிக்கவும்.பின்பு அதனை எடுத்து பேப்பர் டவ்வலில் வைக்கவும்.
அதிலுள்ள எண்ணெய் வெளியேறியதும் அதனை தக்காளி சாஸ் உடன் பரிமாறவும்.