Author Topic: ~ தக்காளிப்பழ அல்வா ~  (Read 350 times)

Offline MysteRy

~ தக்காளிப்பழ அல்வா ~
« on: March 26, 2016, 08:43:21 PM »
தக்காளிப்பழ அல்வா



தக்காளி – அரைக் கிலோ
சீனி – 5 கப்
நெய் – ஒரு கப்
முந்திரி – 30 கிராம்
ஜாதிக்காய் – 1 சிறியது
ஏலக்காய் – 10

நன்கு பழுத்த பெங்களூர் தக்காளியை நான்கு துண்டுகளாய் வெட்டி, ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் அளவு நீர் விட்டு வேகவைக்கவும்.
நன்றாக வெந்ததும் இறக்கி ஆறவைத்து, தோலைநீக்கி நன்றாக பிசைந்து விதைகளையும் சக்கையையும் நீக்கவும்.
ஒரு மெல்லிய துணியில் தக்காளிச் சாற்றை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தக்காளிச்சாற்றை எடுத்து அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். சாறு சுண்டி பாதி அளவாக வரும்போது சீனியைப் போட்டுக் கிளறவும்.
கெட்டியாக தொடங்கும் சமயம் நெய்யை சிறிதுசிறிதாக ஊற்றிக் கிளறவும்.
அல்வா பதமாக வரும்போது முந்திரியை வறுத்துப் போடவும். ஜாதிக்காயையும், ஏலக்காயையும் பொடித்துப் போட்டுக் கிளறவும்.
ஒரு தாம்பாளத்தில் கொட்டிப் பரப்பி ஆறியவுடன் துண்டுகள் போட்டுக் கொள்ளவும்.