Author Topic: ~ தேங்காய் வித் கிழங்கு உப்புமா ~  (Read 388 times)

Offline MysteRy

தேங்காய் வித் கிழங்கு உப்புமா



தேவையானபொருள்கள்

பெரிய மரவள்ளிக் கிழங்கு – 1,
இஞ்சி துருவல் – 1 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 4,
தேங்காய் துருவல் – 1/2 கப்,
உப்பு , எண்ணெய் – தேவைக்கு,
கறிவேப்பிலை, கொத்தமல்லி – பொடித்தது சிறிதளவு.

தாளிக்க :

வேர்க்கடலை, கடுகு, – 1/2 டீஸ்பூன்,
உளுந்து, கடலைப்பருப்பு – தலா 1 டீஸ்பூன்.

செய்முறை

*மரவள்ளிக் கிழங்கை நன்கு மண் போக சுத்தம் செய்து, தண்ணீரில் அலசி ஆவியில் வேகவைத்து, ஆறியதும் துருவிக் கொள்ளவும் அல்லது பொடித்துக் கொள்ளவும்.
*வாணலியில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்ததை தாளித்து, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, தேங்காய் துருவல், மல்லி, கறிவேப்பிலை எல்லாவற்றையும் சேர்த்து வதக்கி, கிழங்கையும் சேர்த்து கிளறி உப்பு தூவி இறக்கி, கரண்டி காம்பு கொண்டு மெதுவாக கிளறி பரிமாறவும். (இதை காரம் சேர்க்காமல் ஏலக்காய் பொடி, சர்க்கரை, தேங்காய் துருவல் சேர்த்து அல்லது வெல்லம் சேர்த்தும் பரிமாறலாம்.)
* இப்போது சுவையான தேங்காய் வித் கிழங்கு உப்புமா ரெடி.!!!!!!!!!!!!!!!!!!!!!!!