Author Topic: ~ ரவா லாடு ~  (Read 392 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226669
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ ரவா லாடு ~
« on: March 26, 2016, 08:00:04 PM »
ரவா லாடு



தேவையான பொருட்கள்:

ரவை – 1 டம்ளர்
சர்க்கரை – 2 1/4 டம்ளர்
நெய் – அரை டம்ளர்
முந்திரிப்பருப்பு – 10
ஏலக்காய் – 4 (பொடித்தது)

செய்முறை

1. ரவையைச் சிவக்க வறுக்கவும்.
2. வறுத்த ரவையை ஆற விட்டு, பின் மின்னரைப்பானில் மையாகத் திரித்துக் கொள்ளவும்.
3. ரவையுடன் சர்க்கரையையும் சேர்த்து ஒரு சுற்று சுற்றவும்.
4. நெய்யில் முந்திரிப்பருப்பைச் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
5. திரித்த ரவையுடன் பொடித்த ஏலக்காய், நெய்யில் வதக்கிய முந்திரிப் பருப்பைச் சேர்க்கவும்.
6. இந்த மாவை சிறிது சிறிதாக நெய் விட்டுப் பிசைந்து உருண்டைகளாகப் பிடிக்கவும்.
7. உருண்டைப் பிடிக்க வரவில்லையென்றால் சிறிது சூடான பாலைத் தெளித்தும் உருண்டைகள் செய்யலாம்.

கூடுதல் தகவல்கள்:

1. பாலைச் சிறிது சிறிதாகத் தெளித்தே மாவை உருண்டை பிடிக்க வேண்டும். அதிகம் பால் விட்டால் கொழகொழத்து உருண்டை பிடிக்க வராது.
2. ரவையை நன்கு சிவக்க வறுக்க வேண்டும். இல்லையென்றால் பச்சை வாடை அடித்து சுவையைக் கெடுத்து விடும்.
3. ரவையைச் சிவக்க வறுத்து வைத்துக் கொண்டால், தேவைப்பட்ட போது உடனடியாக ரவாலாடைத் தயார் செய்து கொள்ள முடியும்.