Author Topic: ~ பேல் பூரி ~  (Read 403 times)

Offline MysteRy

~ பேல் பூரி ~
« on: March 26, 2016, 07:51:40 PM »
பேல் பூரி



தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு – ஒரு சிறிய கப்
பேரீச்சம்பழம் – 150 கிராம்
புளி – 25 கிராம்
வெல்லம் – 100 கிராம்
கடலை பருப்பு – 25 கிராம்
அரிசிப்பொரி – கால் கிலோ
பெரிய வெங்காயம் – 4
உருளைக்கிழங்கு – 4
மிளகாய்த்தூள் – கால் தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 15
கொத்துமல்லி – 2 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

கோதுமை மாவில் உப்புக் கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டுப் பூரிப் பதத்திற்கு மாவு பிசைந்துக் கொண்டு ஐந்து நிமிடங்கள் ஊறவிடவும்.
பின்னர், மிகச்சிறிய பூரிகளாக இட்டு, எண்ணெய்யில் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
விதை நீக்கிய பேரீச்சம்பழத்தையும், புளியையும் மூன்று கப் தண்ணீரில் ஊற வைக்கவும்.
ஒரு மணி நேரம் கழித்து நன்றாக கடைந்துகொண்டு அதில் வெல்லத்தையும் சேர்க்கவும்.
கடலைப் பருப்பையும், பச்சை மிளகாயையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொண்டு ஒரு கப் தண்ணீர் சேர்த்துக் கலக்கவும்.
இரண்டு சட்னியையும் தனித்தனியாக வைக்கவும்.
ஒரு அகலமான பாத்திரத்தில் அரிசிப்பொரி, நொறுக்கிய பூரித்துண்டுகள், உப்பு, மிளகாய்த்தூள், வேக வைத்த உருளைக்கிழங்கு, பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்துமல்லி ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
இந்த கலவையில் தேவையான அளவு இரண்டு சட்னியையும் சேர்த்துப் பரிமாறவும்.