Author Topic: ~ இலங்கை கொத்து ரொட்டி ~  (Read 321 times)

Offline MysteRy

~ இலங்கை கொத்து ரொட்டி ~
« on: March 26, 2016, 07:27:31 PM »
இலங்கை கொத்து ரொட்டி



தேவையான பொருட்கள்:

பரோட்டா – பத்து (சிறிதாக அரிந்தது)
வெங்காயம் – மூன்று
தக்காளி – இரண்டு
பச்சை மிளகாய் – இரண்டு
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 மேசைக்கரண்டி
மிளகுதூள்
உப்பு
லீக்ஸ் சிறிதாக அரிந்தது
கரட் சிறிதாக அரிந்தது
முட்டை – இரண்டு
எண்ணை, சோயா சோஸ், தக்காளி சோஸ்

செய்முறை

முதலில் சட்டியில் எண்ணை விட்டு வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கவும்.
நல்ல வதங்கியதும் லீக்ஸ் சிறிதாக அரிந்தது, கரட் சிறிதாக அரிந்தது போட்டு வதக்கவும்.
பின்பு முட்டையை உடைத்து போடவும். முட்டை நல்ல பொரிந்ததும் பரோட்டாவை போட்டு மிளகுதூள், உப்பு எலுமிச்சை சாறு விட்டு பிரட்டவும்.
சோயா சோஸ், தக்காளி சோஸ் விட்டு பிரட்டவும்.