Author Topic: ~ தால் கிச்சடி ~  (Read 315 times)

Offline MysteRy

~ தால் கிச்சடி ~
« on: March 25, 2016, 10:42:21 PM »
தால் கிச்சடி



பச்சரிசி – 1/2 கப்,
பச்சைப்பயறு – 1/2 கப்,
தண்ணீர் – 3 கப்,
வெங்காயம் – 1,
கலந்த காய்கறிகள் – 1/2 கப் (பீன்ஸ், கேரட், உருளைகிழங்கு மற்றும் பட்டாணி),
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்,
தனியா தூள் – 1/2 டீஸ்பூன்,
கரம் மசாலா தூள் – 1/2 டீஸ்பூன்(தேவைப்பட்டால்),
உப்பு – தேவையான அளவு.

தாளிக்க…

எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,
நெய் – 1 டேபிள்ஸ்பூன்,
சீரகம் – 1/2 டீஸ்பூன்,
பட்டை – ஒரு துண்டு,
கிராம்பு – 2.

அரிசி மற்றும் பச்சைப்பயறு சேர்த்து நன்கு களைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். ஒரு பிரஷர் குக்கரில் எண்ணெய் மற்றும் நெய்யை சூடாக்கி சீரகம், பட்டை, கிராம்பு சேர்த்து நன்கு வறுத்து, இதனுடன் நறுக்கிய வெங்காயம் மற்றும் காய்கறிகள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, மசாலா சாமான், ஊற வைத்த அரிசி, பருப்பு, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து 3-4 விசில் விட்டு இறக்கவும். இதை அப்பளம் மற்றும் தயிருடன் பரிமாறலாம்.