Author Topic: தமிழும் நானும்  (Read 487 times)

Offline thamilan

தமிழும் நானும்
« on: March 24, 2016, 06:21:33 PM »
தமிழ் எனக்கு தலைகவசம்
வண்டி ஓட்டும் போதும்
அதை அணிந்த்திருப்பேன்

தமிழ் எனக்கு மூக்குக் கண்ணாடி
குளிக்கும் போதும்
அதை அணிந்திருப்பேன்

தமிழ் எனக்கு செய்தித் தாள்
அதை படிக்காமல்
பல் துலக்க மாட்டேன்
தமிழ் எனக்கு வீட்டுப் பாடம்
அதை மனப்பாடம் செய்யாமல் தூங்க்க மாட்டேன்

தமிழ் எனக்கு செல்லிடப் பேசி
சொல்லாத ரகசியங்களை
அதனிடம் செல்லமாக சொல்லிவைப்பேன்

தமிழ் எனக்கு சேமிப்பு வங்கி
சொற் காசுகளை சேமித்து
அதில் போட்டு வைப்பேன்

தமிழ் எனக்கு ஆரம்பப் பள்ளி
அங்கே தான்
அ ஆ இ ஈ ...கற்றுக் கொண்டேன்

தமிழ் எனக்கு உயர் நிலை கல்வி
இங்கே தான் வார்த்தைகளை
ஆளும் வல்லமையை பெற்றேன்