Author Topic: ~ உருளைக்கிழங்கு ஆலூ படூரா ~  (Read 325 times)

Offline MysteRy

உருளைக்கிழங்கு ஆலூ படூரா



மைதா – 2 கப்
உருளைக்கிழங்கு – அரைக்கிலோ
உப்பு – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – கால் லிட்டர்

உருளக்கிழங்கினை குக்கரில் நன்றாக வேகவைத்து எடுத்து, தோல் நீக்கி, கட்டியில்லாமல் நன்கு மசித்துக் கொள்ளவும்.
மசித்த கிழங்கோடு மைதாவும், உப்பும் சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் மிருதுவான மாவாக பிசைந்து கொள்ளவும்.
மாவு மிகவும் வறண்டு, மிருதுவாக வரவில்லை என்றால் ஒரு தேக்கரண்டி நெய் அல்லது எண்ணெய் ஊற்றியும் பிசையலாம். மாவு மிருதுவாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.
பிறகு, இக்கலவையை 10 உருண்டைகளாக செய்து கொண்டு, ஒவ்வொன்றையும் பூரியை விடச் சற்று கனமான சப்பாத்திகளாக இடவும்.
ஒரு பெரிய வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் ஒவ்வொன்றாகப் போட்டு இருபுறமும் பொரிக்கவும்.
கொண்டைகடலை மசாலாவோடு பரிமாறவும்