Author Topic: ~ பன்னீர் கட்லெட் ~  (Read 355 times)

Offline MysteRy

~ பன்னீர் கட்லெட் ~
« on: March 20, 2016, 10:23:26 PM »
பன்னீர் கட்லெட்



தேவையான பொருட்கள்

பன்னீர் – 250 கிராம் (துருவியது)
பிரட் துண்டுகள் – 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
வெங்காயம் – 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
சாட் மசாலா – 1 டீஸ்பூன்
மிளகு தூள் – 1/2 டீஸ்பூன்
புதினா – 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
பிரட் தூள் – 1 கப்
மைதா – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு (பொரிப்பதற்கு)

செய்முறை

முதலில் பிரட் துண்டுகளை 1 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து, பின் அதிலுள்ள அதிகப்படியான நீரை பிழிந்து விட வேண்டும். பின்னர் ஒரு பாத்திரத்தில் பன்னீர், பிழிந்து வைத்துள்ள பிரட் துண்டுகள், இஞ்சி பூண்டு பேஸ்ட், வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், சாட் மசாலா, மிளகு தூள், உப்பு, புதினா மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து, கட்லெட்டுகளாக தட்டிக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு பௌலில் மைதா மாவை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கரைத்து, அதில் கட்லெட்டுகளை நனைத்து, பிரட் தூளில் பிரட்டிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கட்லெட்டுகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சூப்பரான பன்னீர் கட்லெட் ரெடி!