Author Topic: ~ கீரை தண்டு சூப் ~  (Read 582 times)

Offline MysteRy

~ கீரை தண்டு சூப் ~
« on: March 19, 2016, 08:05:35 PM »
கீரை தண்டு சூப்



தேவையானவை:

பொன்னாங்கண்ணி கீரை தண்டு – அரை கப்
வெங்காயம் – 1
எண்ணெய் – 1 தேக்கரண்டி
உப்பு – சுவைக்கு
பூண்டு – 2
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
சீரகமும் தூள் – 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் – 1/2 டீஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
கொத்தமல்லி தழை – சிறிதளவு

செய்முறை:

• கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
• பூண்டை நசுக்கி கொள்ளவும்.
• ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் கீரை தண்டு, வெங்காயம், பூண்டு, சீரகம், மிளகு தூள், மஞ்சள் தூள், உப்பு, எண்ணெய், தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்.
• நன்றாக கொதித்து கீரை தண்டு நன்றாக வெந்து வந்ததும் வடிகட்டி தண்டு சாறை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும்.
• இதில் கொத்தமல்லி தழை தூவி பருகவும்.