Author Topic: ~ தானிய வடை ~  (Read 328 times)

Offline MysteRy

~ தானிய வடை ~
« on: March 19, 2016, 06:10:38 PM »
தானிய வடை



தேவையானவை:

 முளைகட்டிய கொள்ளு, முளைகட்டிய சோளம், மொச்சை (ஊற வைத்தது) – தலா 100 கிராம், காய்ந்த மிளகாய் – ஒன்று, இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பொடியாக, நறுக்கிய புதினா, கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய் – 500 மில்லி, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

 கொள்ளு, சோளம், மொச்சை, காய்ந்த மிளகாய், தோல் சீவி நறுக்கிய இஞ்சி, உப்பு எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து கெட்டியாக அரைக்க வும். இதனுடன் கொத்த மல்லி, புதினா சேர்த்துப் பிசையவும். வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்த தும் மாவை வடைகளாக தட்டிப் போட்டு, பொன்னிற மாக வேகவிட்டு எடுக் கவும்.
குறிப்பு: தக்காளி சட்னி, தேங்காய் சட்னி இதற்கு சிறந்த காம்பினேஷன்.