Author Topic: ~ நண்டு குழம்பு ~  (Read 358 times)

Offline MysteRy

~ நண்டு குழம்பு ~
« on: March 17, 2016, 11:40:31 PM »
நண்டு குழம்பு



நண்டு – ஒன்றரை கிலோ
முருங்கைக் கீரை – 2 கைப்பிடியளவு
தேங்காய் பால் (முதல் பால்) – ஒரு கப்
பெரிய வெங்காயம் – 3
தக்காளி – 4
பச்சை மிளகாய் – 3
கறிவேப்பிலை
இஞ்சி, பூண்டு விழுது – 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் – 3 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
வறுத்து பொடிக்க:
சோம்பு – ஒரு தேக்கரண்டி
பட்டை – ஒரு துண்டு (2 இன்ச் அளவு)
ஏலக்காய் – 4
கிராம்பு – 4
சாதிக்காய் – ஒரு துண்டு (2 ஏலக்காயின் அளவு)
கறிவேப்பிலை – 2 கொத்து
தேங்காய் துருவல் – அரை கப் (வறுத்து அரைக்க)

தாளிக்க:

கடுகு – அரை தேக்கரண்டி
வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு

நண்டை சுத்தம் செய்து கழுவி மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி வைக்கவும்.
முருங்கைக் கீரையை கழுவி வைக்கவும். பொடிக்க வேண்டியவற்றை வெறும் கடாயில் கறிவேப்பிலை நொறுங்கும் வரை வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். தேங்காயை சிவக்க வறுத்து அரைத்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க வேண்டியவற்றைத் தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் நண்டு, தக்காளி, முருங்கைக் கீரை மற்றும் உப்பு சேர்த்து மூடிபோட்டு 10 நிமிடங்கள் வேகவிடவும்.
10 நிமிடங்கள் கழித்து மிளகாய் தூள் மற்றும் 2 கப் தண்ணீர் ஊற்றி மீண்டும் வேகவிடவும்.
அனைத்தும் சேர்ந்து நன்கு வெந்ததும், பொடித்த பொடி, தேங்காய் விழுது, மற்றும் தேங்காய் பால் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.
சாதம், இடியாப்பம், புட்டு ஆகியவற்றுடன் சாப்பிட சூப்பரான நண்டு குழம்பு தயார்.