Author Topic: ~ பலாக்கொட்டை சாம்பார் ~  (Read 460 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 227476
  • Total likes: 29061
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
பலாக்கொட்டை சாம்பார்



பலாக்கொட்டை – கால் கிலோ
முருங்கைக்காய் – 2
துவரம் பருப்பு – ஒரு கப்
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 2
பூண்டு – 5 பல்
பச்சை மிளகாய் – 2
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லித் தழை – சிறிதளவு
புளி – நெல்லிக்காய் அளவு
மிளகாய் தூள் – ஒன்றரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
சோம்பு – அரை தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

பலாக்கொட்டையை சுத்தம் செய்து சிறிது உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். துவரம் பருப்புடன் மஞ்சள் தூள் சேர்த்து குழைய வேக வைக்கவும். புளியை கரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு மற்றும் சோம்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு மற்றும் கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும்.
அனைத்தும் வதங்கியதும் நறுக்கிய முருங்கைக்காய், தக்காளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து தக்காளி குழையும் வரை நன்கு வதக்கிக் கொள்ளவும்.
வதங்கியதும் மிளகாய் தூள், புளிக்கரைசல் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி முருங்கைக்காயை வேகவிடவும்.
பிறகு வேக வைத்த பலாக்கொட்டை மற்றும் துவரம் பருப்பை சேர்த்து வேகவிட்டு, கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.
சுவையான பலாக்கொட்டை சாம்பார் தயார்.