Author Topic: சில இலக்கணம்  (Read 495 times)

Offline PraBa

  • Sr. Member
  • *
  • Posts: 373
  • Total likes: 388
  • Total likes: 388
  • Karma: +0/-0
  • வாழிடம் வானமெனில் நனைவது சாத்தியமில்லை ....
சில இலக்கணம்
« on: March 17, 2016, 07:25:26 PM »

கறை படிந்த சிறுவன்
கடைப்பலகையில்
எழுதப்பட்டிருக்கிறது
பஞ்சர் ஓட்டப்படும் என்று....
நீங்கள் கேலி செய்கிறீர்கள்..!
அது
ஓட்டப்படும் இல்லை
ஒட்டப்படும் என்று....
ஒட்டுவது
ஓட்டுவதற்க்குத்தானே என்ற
அவனது பதிலை
நீங்கள்
எதிர்பார்க்கவில்லை என்பதை
உங்கள் மௌனம் அறிவிக்கிறது.....
இலக்கணம் கிறுகிறுக்கிறது
தலைக்கனம் தெறிதெறிக்கிறது....
குறிலுக்கும்
நெடிலுக்குமான உங்கள்
எண்ணத்தை
கிழித்தெறிகிறது
அவனது
ஒற்றை பதில் ....!
இரட்டுற மொழிதலுக்கும்
பகட்டுற மொழிதலுக்குமான
வித்தியாசம் என்னவென்று
உறைத்திருக்கக்கூடும்
உங்களுக்கு ...
உறையச்செய்யும்
உண்மையிலிருந்து
உஷ்ணம் பறக்கிறது...
அடுத்த வண்டியின்
சக்கரம் கழற்றிக்கொண்டே
உங்களைப்பார்த்து சிரிக்கும்
அவனது சிரிப்பு
உங்களை
சுட்டிருக்கலாம்
அல்லது
நீங்கள்
செத்திருக்கலாம்....!
சில
இலக்கணங்கள்
வரையறுக்கப்படுவதை விட
கருவறுக்கப்படுவதே
சரியென்றறிக.....!

Offline SweeTie

Re: சில இலக்கணம்
« Reply #1 on: March 23, 2017, 06:40:47 AM »
மிக மிக அழகான கருத்துக்கள் .  வாழ்த்துக்கள்

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: சில இலக்கணம்
« Reply #2 on: March 23, 2017, 02:30:56 PM »

~ !! வணக்கம் பிரபா !! ~


~ !! மிக அருமையான இலக்கணம்  !! ~
~ !! கருத்துக்களில் மெய்சிலிர்ந்தேன் !! ~
~ !! தொடரட்டும் கவிப்பயணம் !! ~
~ !! வாழ்த்துக்கள் !! ~


~ !! ரித்திகா !! ~

Offline Maran

Re: சில இலக்கணம்
« Reply #3 on: March 25, 2017, 08:07:53 PM »




அருமையான கவிதை நண்பா பிரபா... வாழ்த்துக்கள்!

உண்மையில் அந்த இடத்தில் அந்த சிறுவன் புதுக்கவிதை... இலக்கணங்கள் இதற்கு இல்லை. அவ்விடத்தில் அதை தேடுவதும் முட்டாள்தானம் தான் அவனிடத்திலும், கடைப்பலகையிலும்...