என் ஆன்மாவை விழுங்கி விட்ட கருத்த இரவே !
என் தனிமை கனவிற்குள் குதித்து விட்ட கள்வனே
என் தூக்கத்தை தொலைத்துவிட்டேன் உன் நினைவில்..
என் தேகம் தொடும் உன் சுவாசம் ..
இருள் ஒளி கொள்கிறதே !
காதல் பெருக்கெடுக்கிறதே !
நான் எந்த உலகில் சஞ்சரிகிறேன்
சில்லென்ற மழை ..
மேனி தழுவிடும் குளிர் காற்று
நான் விழித்து விட்டேனா ?
விடிந்து விட்டதா?
எங்கே உன்னை காணோம் ?
ஓ.,, கனவா ? களைந்து விட்டதா ?
நானும் விடை பெறுகிறேன் ...