Author Topic: ~ கேரட் ஸ்வீட் கார்னிவால் ~  (Read 472 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226658
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
கேரட் ஸ்வீட் கார்னிவால்



தேவையானவை:

 பால் - ஒரு லிட்டர், கேரட் - கால் கிலோ, சர்க்கரை - அரை கிலோ, ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சோள மாவு - கால் கிலோ, நெய் - 2 டீஸ்பூன், முந்திரிப்பருப்பு - தேவையான அளவு, எண்ணெய் - அரை கிலோ.

செய்முறை:

 கேரட்டை துருவிக்கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து நெய் விட்டு  கேரட் துருவலை நன்றாக வதக்கிக்கொள்ளவும். அத்துடன் கால் கிலோ சர்க்கரையைக் கலந்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். பின்னர் அதனை நெல்லிக்காய் அளவு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும் (ஒவ்வொரு உருண்டையிலும் ஒரு முந்திரிப்பருப்பை வைத்து அழுத்தமாக உருட்டவும்). எண்ணெயை அடுப்பில் வைத்து சூடாக்கவும். சோள மாவை தோசை மாவு பதத்துக்கு கரைத்துக்கொள்ளவும். உருட்டி வைக்கப்பட்டுள்ள கேரட் உருண்டைகளை ஒவ்வொன்றாக மாவினுள் தோய்த்து எண்ணெயில் போட்டு, சிவக்கப் பொரித்தெடுக்கவும்.

பாலை  வாயகன்ற பாத்திரத்தில் விட்டு, அடுப்பில் வைத்து காயவைக்கவும். பாதியாக குறுகியதும் மீதமுள்ள சர்க்கரையைப் போட்டு மேலும் குறுக்கவும். பின்னர் பாலை அடுப்பிலிருந்து இறக்கி, ஏலக்காய்த்தூள் சேர்த்து, மிதமான சூட்டில் இருக்கும்போது பொரித்தெடுத்த கேரட் உருண்டைகளைப் போட்டு சிறிது நேரம் ஊறவிடவும். பின்னர் ஒரு கப்பில் ஒரு கரண்டி பால், இரண்டு உருண்டைகளைப் போட்டு ஒரு ஸ்பூன் போட்டு கொடுத்தால், சாப்பிடுபவர் ‘வாவ்’ என்று சொல்லாமல் இருக்கமாட்டார்கள்.