Author Topic: ~ திருவாதிரை கூட்டு ~  (Read 354 times)

Offline MysteRy

~ திருவாதிரை கூட்டு ~
« on: March 13, 2016, 11:08:55 PM »
திருவாதிரை கூட்டு



காரட் – ஒன்று
பட்டாணி – 50 கிராம்
சிறிய பீட்ரூட் – ஒன்று
வாழைக்காய் – ஒன்று
தக்காளி – 2
பரங்கிக்காய் – ஒரு சிறிய துண்டு
பூசணிக்காய் – ஒரு துண்டு
அவரைக்காய் – 10
கொத்தவரங்காய் – 50 கிராம்
மொச்சை – 50 கிராம்
உருளைக்கிழங்கு – ஒன்று
சர்க்கரைவள்ளி கிழங்கு – 3
சேப்பங்கிழங்கு – 4
பச்சை மிளகாய் – 4
புளி – ஒரு பெரிய எலுமிச்சை அளவு
துவரம் பருப்பு – 100 கிராம்
சாம்பார் பொடி – 3 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் – ஒரு தேக்கரண்டி
உப்பு – ஒரு மேசைக்கரண்டி + அரை தேக்கரண்டி
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி

தாளிக்க:

கறிவேப்பிலை – 4 கொத்து
கொத்தமல்லி தழை – 3 கொத்து
வெந்தயம் – அரை மேசைக்கரண்டி
கடுகு – அரை மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு – அரை மேசைக்கரண்டி

வறுத்து அரைக்க:

வெந்தயம் – அரை மேசைக்கரண்டி
தேங்காய் துருவல் – அரை கப்
மிளகாய் வற்றல் – 10
துவரம் பருப்பு – 2 மேசைக்கரண்டி
தனியா – 2 மேசைக்கரண்டி
கடலை பருப்பு – ஒரு மேசைக்கரண்டி
மிளகு – அரை மேசைக்கரண்டி
சீரகம் – ஒரு தேக்கரண்டி

காய்கறிகள் அனைத்தையும் நடுத்தரமான அளவிலான துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
குக்கரில் பருப்பை வைத்து 3 விசில் வரும் வரை நன்கு குழைய வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
கிழங்கு வகைகளை மட்டும் தனியாக வேக வைத்து எடுத்து தோலுரித்து வைத்துக் கொள்ளவும். அதை போல காய்கறிகளையும் குக்கரில் வைத்து 2 கப் அளவு தண்ணீர் ஊற்றி 2 விசில் வரும் வரை வேக வைத்துக் கொள்ளவும்.
புளியை தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் ஊற வைத்து எடுத்து கரைத்து, ஒன்றரை கப் அளவு புளிக்கரைசல் எடுத்துக் கொள்ளவும்.
வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், மிளகாய் வற்றல், தனியா, கடலை பருப்பு, 2 கொத்து கறிவேப்பிலை, வெந்தயம், சீரகம், மிளகு, தேங்காய் துருவல் ஆகியவற்றை போட்டு 4 நிமிடம் வறுக்கவும்.
வறுத்து எடுத்து, ஆற வைத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ளவும்.
வேக வைத்த காய்களுடன், வேக வைத்து எடுத்த கிழங்குகளை சேர்க்கவும்.
அதனுடன் புளிக்கரைசலை ஊற்றி கிளறி விட்டு 5 நிமிடம் கழித்து சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு, தக்காளி, பச்சை மிளகாய் போட்டு 12 நிமிடம் கொதிக்க விடவும்.
கொதித்து நுரை வரும் போது அதில் பொடி செய்து வைத்துள்ள மசாலா பொடியை போட்டு கிளறி விட்டு, மீண்டும் ஒரு கொதி வந்ததும் அதில் வேக வைத்த பருப்பை போட்டு கிளறி விடவும்.
வாணலியில் எண்ணெய் ஒரு மேசைக்கரண்டி ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் தாளித்து கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை போட்டு 30 நொடிகள் வதக்கி எடுக்கவும்.
பின்னர் அதை கொதித்து கொண்டிருக்கும் கூட்டுடன் ஊற்றி 2 அல்லது 3 நிமிடம் கழித்து இறக்கி விடவும்.