Author Topic: ~ பீஸ் புலாவ் ~  (Read 315 times)

Offline MysteRy

~ பீஸ் புலாவ் ~
« on: March 13, 2016, 11:01:15 PM »
பீஸ் புலாவ்



காய்ந்த பட்டாணி – 100 கிராம்
வெங்காயம் – ஒன்று
தக்காளி – ஒன்று
பாசுமதி அரிசி – 2 டம்ளர்
நெய் – 3 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கு
மல்லி தழை – சிறிது

அரைக்க:

புதினா – பாதி கட்டு
பச்சைமிளகாய் – 6
இஞ்சி – சிறு துண்டு
பூண்டு – 6 பல்
கிராம்பு – 2
ஏலக்காய் – 2
பட்டை – சிறுத் துண்டு

தாளிக்க:

வெங்காயம் – ஒன்று
தக்காளி. – ஒன்று
கறிவேப்பிலை – சிறிது
ஏலக்காய் – 2
கிராம்பு – 2
பட்டை – சிறுத் துண்டு
முந்திரி, திராட்சை – தேவைக்கு
எண்ணெய் – ஒரு குழிக்கரண்டி

பட்டாணியை இரவே ஊற வைத்துக் கொள்ளவும். பாசுமதி அரிசியை அரைமணி நேரம் ஊற வைக்கவும். வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும். புதினாவை சுத்தப்படுத்தி கழுவி வைக்கவும். இஞ்சி, பூண்டு தோல் எடுத்து வைக்கவும்.
அரைக்க கொடுத்தவைகளை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்தவைகளை போட்டு தாளிக்கவும்.
அதனுடன் வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை போட்டு வதக்கி ஊற வைத்த பட்டாணியும் சேர்த்து நன்கு வதக்கவும்.
வதக்கியதில் அரைத்த மசாலாவை போட்டு பச்சை வாசனை போக வதக்கி 3 1/2 டம்ளர் தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். கொதி வந்ததும் அரிசி, உப்பு போட்டு தண்ணீர் வற்றி வரும் பொழுது, சிம்மில் வைத்து மல்லி தழை நெய் சேர்த்து மூடியை போட்டு மூடவும். பின்னர் வெய்ட் போட்டு சிறு தீயில் 5 நிமிடம் வைத்திருந்து இறக்கவும்.
ஆவி போனதும் மூடியை திறந்து ஒரு முறை அடி வரை கிளறி விட்டு பின் பரிமாறவும். சுவையான பீஸ் புலாவ் ரெடி.
« Last Edit: March 13, 2016, 11:12:14 PM by MysteRy »