Author Topic: ~ இராசவள்ளிக் கிழங்கு புடிங் ~  (Read 317 times)

Offline MysteRy

இராசவள்ளிக் கிழங்கு புடிங்



இராசவள்ளிக் கிழங்கு – ஒன்று (பெரியது)
தேங்காய் – 1/2 மூடி
சீனி – ஒரு கப்
உப்பு – ஒரு சிட்டிகை

 என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ராசாவள்ளிக்கிழங்கு அளவில் பெரியதாக இருக்கும். கிழங்கின் உட்புறம் இளம் ஊதா வண்ணத்தில் இருக்கும். இளம் மஞ்சள் வர்ணத்திலும் ஒரு வகை உண்டு. இந்த கிழங்கினை உப்பிட்டு அவித்து சாப்பிட மிகவும் சுவையாய் இருக்கும்.
இலங்கை வாழ் மக்கள் இதனை அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர்.
இராசவள்ளிக்கிழங்கை தோல் சீவி சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். தேங்காயைத் துருவி பால் பிழிந்து முதல் பால் மற்றும் இரண்டாவது, மூன்றாவது பாலை தனித்தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் இரண்டாம் மூன்றாம் பாலை ஊற்றி சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பால் கொதித்ததும் அதில் நறுக்கி வைத்துள்ள இராசவள்ளிக் கிழங்கை போட்டு ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வேக விடவும்.
கிழங்கு வெந்ததும் அதில் சீனியை சேர்க்கவும். தீயின் அளவை குறைத்து வைத்து அடிக்கடி கிளறி விடவும்.
சீனி கரைந்து சற்று கெட்டியானதும் அதனுடன் பிழிந்து வைத்திருக்கும் முதற் பாலை ஊற்றவும்.
பின்னர் கிழங்கை கரண்டியால் நன்கு மசித்து விடவும். தண்ணீர் சுண்டியதும் அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.
சுவையான இராசவள்ளிக் கிழங்கு புடிங் தயார். இதை சூடாகவும் சாப்பிடலாம், அல்லது குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்து பின்னர் ஜில்லென்றும் சாப்பிடலாம்.