Author Topic: ~ ஈஸி உருளை ஃப்ரை ~  (Read 400 times)

Offline MysteRy

~ ஈஸி உருளை ஃப்ரை ~
« on: March 11, 2016, 08:50:09 PM »
ஈஸி உருளை ஃப்ரை



உருளைக்கிழங்கு – அரைக் கிலோ
மிளகாய் தூள் – ஒரு தேக்கரண்டி
மல்லி தூள் – அரை தேக்கரண்டி
கரம் மசாலா – அரை தேக்கரண்டி
தயிர் – 3 தேக்கரண்டி
கடுகு – அரை தேக்கரண்டி
எண்ணெய் – 2 தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ப

உருளைக்கிழங்கை தோல் சீவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
நறுக்கிய உருளைக்கிழங்கில் ஒரு தேக்கரண்டி எண்ணெய், அரை தேக்கரண்டி உப்பு சேர்த்து கிளறி மைக்ரோவேவில் ஹையில் 5 நிமிடம் வைக்கவும். 3 நிமிடத்தில் எடுத்து, கிளறி விட்டு மீண்டும் வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, உருளைக்கிழங்கை சேர்த்து தேவைக்கேற்ப உப்பு சேர்த்து மூடி போட்டு 2 நிமிடம் வேக விடவும்.
அதில் பொடி வகைகளை சேர்த்து பிரட்டி மேலும் ஒரு நிமிடம் வைத்திருக்கவும்.
கடைசியில் தயிர் சேர்த்து கிளறி, தயிர் ஈரப்பதம் போனதும் இறக்கவும்.
சுவையான ஈஸி உருளை ஃப்ரை ரெடி.