Author Topic: ~ எலுமிச்சை ரசம் ~  (Read 333 times)

Offline MysteRy

~ எலுமிச்சை ரசம் ~
« on: March 11, 2016, 01:49:48 PM »
எலுமிச்சை ரசம்



எலுமிச்சை – ஒன்று
தக்காளி – 2
பூண்டு – 8 பல்
பச்சை மிளகாய் – ஒன்று
மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
கறி மசாலா – ஒரு தேக்கரண்டி
மிளகாய் வற்றல் – ஒன்று
கடுகு – அரை தேக்கரண்டி
உப்பு – அரை தேக்கரண்டி
கொத்தமல்லி – ஒரு கொத்து
கறிவேப்பிலை – 2 கொத்து
எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி

தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தக்காளியை நன்கு நசுக்கி விட்டு பிசைந்துக் கொள்ளவும். அதில் மஞ்சள் தூள், உப்பு, கறி மசாலா மற்றும் பச்சை மிளகாயை கிள்ளி போடவும்.
பூண்டை தோல் உரித்து விட்டு அம்மியில் வைத்து நசுக்கி எடுத்துக் கொள்ளவும். எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி நசுக்கி வைத்திருக்கும் தக்காளி கலவையை அதில் ஊற்றவும். பிறகு தட்டி வைத்திருக்கும் பூண்டில் 3 பூண்டை மட்டும் அதில் போட்டு கரைத்துக் கொள்ளவும்.
கரைத்தவற்றை அடுப்பில் அதிக தீயில் வைத்து கொதிக்க விடவும். நுரைத்து பொங்கி வரும் போது எடுத்து பாத்திரத்தில் ஊற்றி வைக்கவும்.
வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் மிளகாய் வற்றலை கிள்ளி போட்டு கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை மற்றும் மீதம் இருக்கும் பூண்டை போட்டு தாளிக்கவும்.
ஒரு நிமிடம் கழித்து எடுத்து வைத்திருக்கும் ரசத்தை தாளித்தவற்றில் ஊற்றி ஒரு நிமிடம் அடுப்பில் வைக்கவும்.
பிறகு அதில் எலுமிச்சை சாறை ஊற்றி கிளறி ஒரு நிமிடம் கழித்து அடுப்பில் இருந்து இறக்கவும்.
மிக எளிதில் தயார் செய்ய கூடிய லெமன் ரசம் தயார். அறுசுவை நேயர்களுக்காக இந்த குறிப்பினை செய்து காட்டியவர் திருமதி. கமர் நிஷா அவர்கள்.