Author Topic: ~ ஃபிரைட் டோஃபு ~  (Read 319 times)

Offline MysteRy

~ ஃபிரைட் டோஃபு ~
« on: March 11, 2016, 01:44:30 PM »
ஃபிரைட் டோஃபு



டோஃபு (Tofu) – ஒரு கப்
காரட் – 1/2 கப்
பெல் பெப்பர் – 1/4 கப்
பீன்ஸ் – 1/2 கப்
அஸ்பராகஸ் – 1/2 கப்
காலிஃபிளவர் – 1/2 கப்
வெங்காயம் – 1/4 கப்
உள்ளி – 4 பல்லு
பச்சை மிளகாய் – 3
இஞ்சி – 1 தேக்கரண்டி
மிளகாய் ஃபிளேக்ஸ் – 1 தேக்கரண்டி
பிரவுன் சுகர் – 1 தேக்கரண்டி
சோய ஸோஸ் – 1 1/2 தேக்கரண்டி
பட்டர் – 3 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

தேவையான பொருட்களை தயாராய் எடுத்துக்கொள்ளவும். காரட், பெல்பெப்பர், பீன்ஸ், அஸ்பராகஸ், வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை நீளமான துண்டுகளாக வெட்டவும். டோஃபு, காலிஃபிளவர், இஞ்சியை சிறிய துண்டுகளாக வெட்டவும். உள்ளியை நசித்து வைக்கவும்.
ஒரு பானில் சிறிது எண்ணெய் விட்டு டோஃபுவை சோட்டே(sautee) செய்யவும்.
ஒரு பாத்திரத்தில் பட்டரை போட்டு உருகியதும் மிளகாய் ஃபிளேக்ஸ், உள்ளியை போட்டு வதக்கவும்.
பின்னர் நறுக்கின இஞ்சி, வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
அதன் பிறகு நறுக்கி வைத்துள்ள மற்ற காய்கறிகளைச் சேர்த்து, உப்பை போட்டு கிளறி மூடி 8- 10 நிமிடங்கள் மூடி மிதமான சூட்டில் அவிய விடவும்.
பின்னர் மூடியை திறந்துவிட்டு தண்ணீர் வற்றும்வரை வேக விடவும்.
தண்ணீர் வற்றி காய்கள் ஓரளவு வதங்கியதும் அதனுள் சோயா ஸோஸ், பிரவுண் சீனி சேர்த்து 2 – 3 நிமிடங்களுக்கு கிளறவும். பின்னர் டோஃபுவை கொட்டி கலந்து இறக்கவும்.
சுவையான டோஃபு டிஷ் தயார். இதனை தனியே சாப்பிடலாம் அல்லது நூடில்ஸ், ஸ்பகடியுடன் சேர்த்தும் உண்ணலாம்.