Author Topic: ~ லீக்ஸ் சூப் ~  (Read 332 times)

Offline MysteRy

~ லீக்ஸ் சூப் ~
« on: March 11, 2016, 01:39:07 PM »
லீக்ஸ் சூப்



பயத்தம்பருப்பு – 1 கப்,
எலுமிச்சைச்சாறு – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – 1 கப் (அரைத்தது),
பொடியாக நறுக்கிய லீக்ஸ் – 1 கப்,
காய்கறி வெந்த தண்ணீர் – 1 கப்,
தேங்காய்ப்பால் – 1/2 கப்,
மைதா – 1/2 கப், வெண்ணெய் – சிறிது.

வெண்ணெயை உருக்கி அதில் மைதாவைச் சேர்த்து வறுக்கவும். அதன் மேல் லீக்ஸ், அரைத்த கொத்தமல்லி விழுது போடவும். பின் காய்கறி வெந்த தண்ணீர், உப்பு, மிளகுத் தூள், எலுமிச்சைச்சாறு சேர்க்கவும். இதற்குள் பயத்தம்பருப்பை வெறும் கடாயில் வறுத்துப் பின் ஃப்ரெஷர் குக்கரில் தண்ணீர் போட்டு வேக வைக்கவும். வெந்த பருப்பையும் சேர்த்துக் கொதிக்க விட்டு, எல்லாம் சேர்ந்த பிறகு, கீழே இறக்கி வைத்துச் சுடச்சுடப் பரிமாறவும்.