Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Do you want to be a Our Forum member contact us @
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ கொய்யா பழத்தை எப்போது சாப்பிட வேண்டும்? ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ கொய்யா பழத்தை எப்போது சாப்பிட வேண்டும்? ~ (Read 404 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 226727
Total likes: 29016
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ கொய்யா பழத்தை எப்போது சாப்பிட வேண்டும்? ~
«
on:
March 10, 2016, 03:07:27 PM »
கொய்யா பழத்தை எப்போது சாப்பிட வேண்டும்?
கொய்யா பழத்தில் முக்கிய உயிர்சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன.
கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம், இருமல் தொண்டை மற்றும் இதயம் சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன.
அடங்கியுள்ள சத்துக்கள்
கொலஸ்ட்ரால் கிடையாது, சோடியம் – 3 மிகி, பொட்டாசியம் 417 மிகி, கார்போஹைட்ரேட் 14 கி, புரோட்டின் 2.6 கி, விட்டமின் ஏ 12 சதவீதம், கால்வியம், விட்டமின் D, விட்டமின் B12 , விட்டமின் C, இரும்புச்சத்து, விட்டமின் B6, மக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன.
பயன்கள்
கொய்யா பழத்தை நன்றாக கழுவிய பிறகு, பற்களால் கடித்து நன்கு மென்று தின்பதே நல்லது. இதனால் பற்களும், ஈறுகளும் பலப்படும்.
வேறு எந்தப் பழத்திலும் இல்லாத விட்டமின் சி என்ற உயிர்ச்சத்து, இப்பழத்தில் அதிக அளவில் காணப்படுகிறது.
அதனால் வளரும் குழந்தைகளுக்கு கொய்யா பழம் ஒரு வரப்பிரசாதமாகும். உடல் நன்கு வளரவும், எலும்புகள் பலம் பெறவும் உதவும்.
கொய்யாவின் தோலில் தான் அதிகசத்துக்கள் உள்ளன. இதனால் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது. முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது.
தோல் வறட்சியை நீக்குகிறது. முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராக மாற்றுகிறது. மது போதைக்கு அடிமையான, மது பிரியர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட நினைத்தால், இப்பழத்தை அதிகம் சாப்பிடலாம்.
இதை தொடர்ந்து சாப்பிட்டால் மது அருந்தும் ஆசை, வெறி எல்லாம் தூள் தூளாகி விடும். மிக எளிதில் மது போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம்.
கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து, காயத்தின் மேல் தடவினால், அவை விரைவில் ஆறிவிடும். கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கு மருந்தாக உதவுகின்றன.
கொய்யாமரத்தின் பட்டை, பாக்டீரியா அழுகலை தடுக்கும். காய்ச்சலைப் போக்கும். வேர் பட்டை குழந்தைகளின் வயிற்றுப்போக்கை குணப்படுத்தும்.
எப்போது சாப்பிட வேண்டும்?
சாப்பிடுவதற்கு முன் இப்பழத்தை சாப்பிடுவது நல்லதல்ல. சாப்பிட்ட பின்போ, அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ சாப்பிட்டால் நல்லது.
கொய்யா பழத்தை இரவில் சாப்பிடக்கூடாது.
நோயால் அவதியுற்று மருந்து சாப்பிட்டு வருபவர்கள், இப்பழத்தை சாப்பிட்டால் மருந்து முறிவு ஏற்படும். இருமல் இருக்கும் போது இப்பழத்தை சாப்பிட்டால் அதிகமாகும். தோல் தொடர்பான வியாதி உள்ளவர்கள், இப்பழத்தை உண்டால் நோய் அதிகரிக்கும்.
கொய்யாப்பழத்திற்கு மருந்தை முறிக்கும் ஆற்றல் உண்டு. ஒரு சிலருக்கு மயக்கத்தை ஏற்படுத்தும். வாதநோய், ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிடக்கூடாது.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
Special Category
»
மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty
»
~ கொய்யா பழத்தை எப்போது சாப்பிட வேண்டும்? ~