Author Topic: ~ பொடி இட்லி ~  (Read 380 times)

Online MysteRy

~ பொடி இட்லி ~
« on: March 10, 2016, 01:48:37 PM »
பொடி இட்லி



மினி இட்லி – தேவையான அளவு,
மிளகுத்தூள், எள் பொடி தலா – 1 டீஸ்பூன்,
இட்லி மிளகாய் பொடி – 1 டேபிள்ஸ்பூன்,
நல்லெண்ணெய் – சிறிது,
உப்பு – ருசிக்கு,
கறிவேப்பிலை பொடி – 1 டேபிள்ஸ்பூன்.

தாளிக்க…

கடுகு – 1 டீஸ்பூன்,
கறிவேப்பிலை, கஸ்தூரி மேத்தி (காய்ந்த வெந்தய கீரை) – சிறிது,
நெய் – 1 டேபிள்ஸ்பூன்.
பொடி இட்லி

இட்லி மிளகாய் பொடியில் நல்லெண்ணெய் கலந்து 5 இட்லிகளில் மேல், கீழ் பகுதிகளில் தடவவும். வறுத்த எள் பொடி, மிளகுத் தூள், நல்லெண்ணெய் விட்டு மீதி 5 இட்லியை புரட்டவும். கறிவேப்பிலை பொடியில் எண்ணெய் ஊற்றி மீதமுள்ள இட்லியை புரட்டி வைக்கவும். ஒவ்வொரு வகை இட்லியையும் (மொத்தம் 3 வரும்) மூன்று மூன்றாக அடுக்கி டூத்பிக் அல்லது ஐஸ் குச்சியில் குத்தவும். கடாயில் நெய் விட்டு தாளிக்கும் பொருளை தாளித்து அடுக்கி வைத்துள்ள மல்டி கலர் இட்லி மீது கொட்டி பரிமாறவும். மணமும் சுவையும் கொண்ட அபாரமான இட்லி இது!