Author Topic: ~ வெங்காய ஊறுகாய் ~  (Read 368 times)

Offline MysteRy

~ வெங்காய ஊறுகாய் ~
« on: March 09, 2016, 11:35:41 PM »
வெங்காய ஊறுகாய்



சின்ன வெங்காயம் கால் கிலோ.
காய்ந்த மிளகாய் பத்து.
புளி எலுமிச்சை அளவு.
உப்பு தேவையான அளவு.
நல்லெண்ணெய் நூறு மில்லி.
பெருங்காயம் தேவையான அளவு.
வெல்லம் நெல்லிக்காய் அளவு.
கடுகு அரை டீஸ்பூன்.

செய்முறை:

மிக்ஸியில் காய்ந்த மிளகாய் ஊற
வைத்த புளி உப்பு சின்ன வெங்காயம்
ஆகியவற்றை போட்டு விழுதாக
அரைக்கவும்.
அடுப்பில் கடாயை வைத்து காய்ந்த
தும் நல்லெண்ணெய் ஊற்றி கால்
டீஸ்பூன் கடுகு பெருங்காயம்
தாளித்து அரைத்த விழுதை கடாயில்
சேர்த்து அடுப்பை சிம்மில் வைத்து
நன்றாக கொதிக்க விடவும். ஊறு
காய் அடி பிடிக்காமல் அடிக்கடி
கரண்டியால் கிளறிக்கொள்ளவும்.
ஊறுகாய் சுண்ட சுருள வதங்கி எண்
ணெய் பிரிந்து வெங்காயம் நல்ல
மணம் வந்தவுடன் மீதி கால் டீஸ்
பூன் கடுகை வெரும் வாணலியில்
வறுத்து பொடியாக்கி ஊறுகாயில்
கலந்து ஆறியபின் ஊறுகாயை
காற்று புகாத டப்பாவில் வைக்கவும்.
குறிப்பு;இது தயிர் சாதம் எலுமிச்சை
சாதம் புளி சாதம் ஆகியவற்றுக்கு
தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.