Author Topic: ~ வல்லாரை துவையல் ~  (Read 351 times)

Offline MysteRy

~ வல்லாரை துவையல் ~
« on: March 09, 2016, 11:32:37 PM »
வல்லாரை துவையல்



1.வல்லாரை பத்து அல்லது பதி
னைந்து இலை.
2.தேங்காய் துருவல் சிறிதளவு.
3.இஞ்சி சிறிய துண்டு.
4.உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன்.
5.கடலைப்பருப்பு ஒரு டீஸ்பூன்.
6.பெருங்காயம் சிறு துளி.
7.காய்ந்த மிளகாய் இரண்டு.
8.புளி சிறிய நெல்லிக்காய் அளவு.
9.உப்பு தேவையான அளவு.
10.எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

அடுப்பில் கடாயை வைத்து காய்ந்
ததும் எண்ணெய் ஊற்றி உளுத்தம்
பருப்பு போட்டு சிவந்ததும் கடலைப்
பருப்பு பெருங்காயம் காய்ந்த மிள
காய் அதோடு வல்லாரை இலை
களையும் சேர்த்து நன்றாக வதக்கி
சிறிதாக நறுக்கிய இஞ்சி துண்டு
களையும் சேர்த்து உப்பு புளி தேங்
காய்த்துருவல் சேர்த்து வதக்கி
ஆறவைத்து மிக்ஸியில் அரைத்து
கடைசியில் கடுகு தாளித்து
கொட்டி ஒரு சுற்று விட்டு அரைத்து
எடுத்து சூடான சாதத்தில் போட்டு நல்லெண்ணெய் விட்டு பிசைந்து
சாப்பிட அருமையாக இருக்கும்.

குறிப்பு:

வல்லாரை கீரை வளரும் குழந்தை
களின் ஞாபக சக்திக்கு மிகவும்
ஏற்றது.