Author Topic: ~ சீன நண்டு பொரியல் ~  (Read 315 times)

Offline MysteRy

~ சீன நண்டு பொரியல் ~
« on: March 08, 2016, 11:05:55 PM »
சீன நண்டு பொரியல்



தேவையான பொருட்கள்:

நண்டு – 1/2 கிலோ
மைதா – 2 கையளவு
சோள மாவு – ஒரு கையளவு
உப்பு – தேவையான அளவு
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
அஜினமோட்டோ – 1 சிட்டிகை
சோயா சாஸ் – 1 டீஸ்பூன்
எண்ணெய் – பொரிப்பதற்கு

செய்முறை:

நண்டை சுத்தம் செய்து சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் துண்டாக்கிக் கொள்ளவும்.மைதா மாவு, சோள மாவு, உப்பு, மிளகாய்த் தூள்,அஜினமோட்டோ,சோயாசாஸ், உப்பு இவற்றை ஒன்றாகக் கலந்து கெட்டியான கலவையாக செய்யவும்.நண்டை இந்தக் கலவையில் புரட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,மாவில் தோய்த்த நண்டைப் போட்டு புரட்டி எடுக்கவும்.