Author Topic: ~ இடியப்பப் புரியாணி ~  (Read 357 times)

Offline MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226286
  • Total likes: 28777
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ இடியப்பப் புரியாணி ~
« on: March 08, 2016, 10:09:07 PM »
இடியப்பப் புரியாணி



தேவையான பொருட்கள்:

12-14 இடியப்பங்கள்(1சு. அரிசிமாவில் அவித்தது)
115 கிராம் உருளைக்கிழங்கு
115 கிராம் முட்டைக்கோவா
115 கிராம் பிஞ்சு மஞ்சள் போஞ்சி
115 கிராம் லீக்ஸ்
115 கிராம் கரட்
4 மே.க மார்ஜரீன், வெண்ணெய் அல்லது சுத்திகரிக்கப்பட்ட தாவரநெய்
1¼ தே.க.உப்புத்தூள்
½ தே.க.மிளகுதூள்
1 மே.க.குறுணலாக வெட்டிய பச்சைமிளகாய்
3 மே.க.வெட்டிய வெங்காயம்
2 தே.க.குறுணலாக வெட்டியபூடு
½ தே.க.குறுணலாக வெட்டிய இஞ்சி
6 செ.மீ.நீளமுள்ள றம்பையிலை, பொடியாக அரிந்தெடுக்கவும்
8-10 கருவேப்பிலை, கிழித்துப் போடவும்
½ தே.க.ஏலப்பொடி
125 கிராம் தக்காளிப்பழம் முந்திரிப்பருப்பு, முந்திரிவற்றல்

செய்முறை:

இடியப்பத்தை நன்றாக உலுத்தி, உருளைக்கிழங்கை அவித்து, உரித்து, சிறு துண்டுகளாக வெட்டி, முட்டைக்கோவா, போஞ்சி, லீக்ஸ், கரற் என்பவற்றையும் துப்பரவாக்கி, கழுவி, வடியவிட்டு, சிறியதாக அரிந்து கொள்க.
ஒரு அகலமான தாச்சியில் 2 மேசைக்கரண்டி மார்ஜரீனைப் போட்டு, அரிந்த மரக்கறி, 1 தேக்கரண்டி உப்புத்தூள், மிளகுதூள் என்பவற்றைப்போட்டு, 2 நிமிடங்கள் கிளறிவிட்டு, பிறகு ஒரு மூடியால் மூடி, நிதானமான நெருப்பில் விட்டு, 4-5 நிமிடங்களின் பின்னர் திறந்து கிளறி, மரக்கறி மெதுமையாக வதங்கியவுடன் வழித்து எடுக்கவும். மறுபடியும் அத்தாச்சியை அலம்பிக் காயவிட்டு, 2 மேசைக்கரண்டி மார்ஜரீனைப்போட்டு, வெட்டிய பச்சைமிளகாய், வெங்காயம், பூடு, இஞ்சி, றம்பை, கருவேப்பிலை என்பவற்றைப் போட்டு, வாசைனவரப் பொன்னிறமாக வதக்கி, அவத்த உருளைக்கிழங்கைப் போட்டு, பிறகு வதக்கி வைத்த மரக்கறி, உலுத்திய இடியப்பம், ஏலப்பொடி என்பவற்றைப் போட்டு, சிறிது மசித்து கலந்து, நன்கு சூடேறியவுடன் இறக்கவும். இதனை ஒரு தட்டையான பாத்திரத்தில் போட்டு தக்காளிப் பழத்தை பெரிய துண்டுகளாக வெட்டி, ¼ தேக்கரண்டி உப்புத்தூள் சேர்த்து புரட்டி, சிறிது மார்ஜரீனில் மசியாதபடி வதக்கி, மேலே போட்டு, இரண்டிரண்டாகப் பிளந்த முந்திரிப்பருப்பு, முந்திரிவற்றல் என்பவற்றையும் பொரித்து மேலே போட்டு அலங்கரித்துக் கொள்க.