Author Topic: ~ வெண்டைக்காய் வத்தக்குழம்பு ~  (Read 321 times)

Offline MysteRy

வெண்டைக்காய் வத்தக்குழம்பு



வெண்டைக்காய்- 12
புளி- எலுமிச்சை அளவிற்கும் மேல்
மஞ்சள் தூள்- 1/2 டீஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
கறிவேப்பிலை- 1 இணுக்கு
கொத்தமல்லி- அலங்கரிக்கச் சிறிதளவு

அரைக்க:

கடலைப்பருப்பு- 1 டீஸ்பூன்
துவரம்பருப்பு- 1/2 டீஸ்பூன்
தனியா- 1 டீஸ்பூன்
வெந்தயம்- 1/4 டீஸ்பூன்
மிளகாய்வற்றல்- 3(பெரியது)
காயம்- சிறிதளவு
வெங்காயம்- 1
தக்காளி- 1/2
பூண்டு- 3 பல்லு

தாளிக்க:

நல்லெண்ணெய்- 3 டீஸ்பூன்
கடுகு- 1 டீஸ்பூன்
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

ஒரு வாணலியில் எண்ணெயிட்டு(குறிப்பிட்ட எண்ணெயில் பாதி) கடுகு, வெள்ளை உளுத்தம்பருப்பைத் தாளிசம் செய்து கொள்ள வேண்டும். கடுகு வெடித்தவுடன் அலம்பி நறுக்கின வெண்டைக்காய்த் துண்டுகளை தாளித்தவற்றுடன் சேர்த்து நன்றாக வதக்கவும். ஊற வைத்த புளித்தண்ணீர் விட்டு உப்பு, மஞ்சள் பொடி,காயம் போட்டு காயை வேக விடவும். இன்னொரு வாணலியில் சிறிது எண்ணெயில் கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, வெந்தயம், தனியா, மிளகாய்வற்றல் ஆகிய பொருட்களைச் சிவக்க வதக்க வேண்டும்.
வதக்கின பொருட்களை வேறொரு தட்டில் ஆற விட்டு அதே வாணலியில் வெங்காயத்தைச் சிவக்க வதக்கவும். வதங்கும் போதே பூண்டையும் தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.
வதங்கின பொருட்கள் ஆறினவுடன் மிக்சியில் வதக்கி வைத்த பருப்புகள், வெங்காயக்கலவை ஆகிய அனைத்தையும் இட்டு நன்றாக அரைத்து எடுக்கவும். காய் வெந்திருக்கும், அதனுடன் அரைத்த மசாலாவைச் சேர்த்து கொதிக்க விடவும். கொதித்தவுடன் கறிவேப்பிலையைக் கசக்கி குழம்பில் விடவும். தனியே நல்லெண்ணெயைக் காய்ச்சி குழம்புடன் சேர்க்கவும். கொத்தமல்லியைத் தூவி அலங்கரிக்கவும்