Friends Are Like Diamonds ! Feel Your Friendship!
Please
login
or
register
.
1 Hour
1 Day
1 Week
1 Month
Forever
Login with username, password and session length
News:
Do you want to be a Our Forum member contact us @
[email protected]
Like stats
Home
Help
Search
Calendar
Login
Register
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
~ வாக்குவம் க்ளீனருக்கு `வெல்கம்’...டஸ்ட் அலர்ஜிக்கு `டாட்டா’! ~
« previous
next »
Print
Pages: [
1
]
Go Down
Author
Topic: ~ வாக்குவம் க்ளீனருக்கு `வெல்கம்’...டஸ்ட் அலர்ஜிக்கு `டாட்டா’! ~ (Read 845 times)
MysteRy
Global Moderator
Classic Member
Posts: 222725
Total likes: 27692
Total likes: 27692
Karma: +2/-0
Gender:
♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
~ வாக்குவம் க்ளீனருக்கு `வெல்கம்’...டஸ்ட் அலர்ஜிக்கு `டாட்டா’! ~
«
on:
March 07, 2016, 02:37:30 PM »
வாக்குவம் க்ளீனருக்கு `வெல்கம்’...டஸ்ட் அலர்ஜிக்கு `டாட்டா’!
வீட்டைச் சுத்தமாக்கும் வேலையை எளிதாக செய்து முடிக்கும் வாக்குவம் க்ளீனரை வாங்கும்போது பரிசீலிக்க வேண்டிய விஷயங்கள் மற்றும் பராமரிக்க வேண்டிய முறைகள் பற்றிச் சொல்கிறார், சென்னை சத்யா ஏஜென்சியின் விற்பனைப் பிரிவைச் சேர்ந்த அஜய்குமார்.
வகைகள்
``வாக்குவம் க்ளீனரில் டிரை, வெட் அண்ட் டிரை என இரண்டு வகைகள் இருக்கின்றன. தரை, ஜன்னல், கதவு, சுவர்கள், சோபா, மெத்தை, கார் ஸீட் சுத்தம் செய்ய டிரை வாக்குவம் க்ளீனர் வாங்கலாம். தரையில் டீ, காபி, தண்ணீர் போன்றவை கொட்டிவிட்டால்.. அதை துணியைக் கொண்டு சுத்தம் செய்துகொண்டிருக்க தேவையில்லை. ஈரத்தைச் சுத்தம் செய்ய வெட் அண்ட் டிரை வாக்குவம் க்ளீனர் தேர்வு செய்யலாம். மேலும், சிறிய வீட்டு உபயோகத்துக்கானது, பெரிய வீடுகளைச் சுத்தம் செய்ய உகந்தது, அலுவலகப் பயன்பாட்டுக்கானது என்று அளவு மற்றும் செயல்திறனில் வேறுபாடு உள்ள மாடல்கள் உள்ளன. தேவைக்குத் தகுந்த மாடல்களைப் பார்த்து தேர்வு செய்யலாம்.
விலை
டிரை வாக்குவம் க்ளீனர் 2,600 ரூபாயில் இருந்தும் வெட் அண்ட் டிரை க்ளீனர் 9,000 ரூபாயில் இருந்தும் கிடைக்கின்றன. ஒரு வருட வாரன்டி உண்டு. சில இறக்குமதி மாடல்களில் ஈரத்தைத் துடைக்கும் மாப் அட்டாச்மென்ட் இருக்கும். தேவைப்படுபவர்கள், அந்த மாப் மாடலைக் கேட்டு வாங்கலாம்.
அட்டாச்மென்ட்ஸ்
வாக்குவம் க்ளீனருடன் டஸ்ட் பேக், பிரஷ், டியூப் போன்ற அக்சஸரிகள் கொடுக்கப்படும். வாங்கும் மாடலுக்குத் தகுந்தாற்போல 4 முதல் 13 அட்டாச்மென்ட்டுகள் வரை பெறலாம். பாகங்கள் அனைத்தும் பிளாஸ்டிக் என்பதால், பயன்படுத்துவது சுலபம்.
வாங்கும்போது கவனிக்க...
வாக்குவம் க்ளீனர் உபகரணத்தில் மோட்டார்தான் முக்கியம். எனவே, வாங்கும்போது மோட்டார் சரியாக, ஸ்மூத்தாக வேலை செய்கிறதா என்று பரிசோதித்து வாங்கவும்.
கொடுக்கும் அட்டாச்மென்ட்டுகள் எல்லாம் சரியாகப் பொருந்துகிறதா எனப் பார்க்கவும்.
இப்போது வாக்குவம் க்ளீனர் வாங்கும் கடைகளில் அதைப் பற்றிய டெமோ தருவது இல்லை. அதனுடன் ஒரு சி.டி-தான் தருகிறார்கள். ஒருவேளை டெமோ கொடுத்தாலும், ஒரே டெமோவில் எல்லா செயல்பாடுகளையும் உள்வாங்கிக்கொள்வது சிரமம். எனவே, வாக்குவம் க்ளீனரைப் பயன்படுத்துவதில் உள்ள சந்தேகங்களுக்கு அந்த சி.டி-யில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கங்கள் கைகொடுக்கும். சி.டி-யை தவறாமல் கேட்டு வாங்கவும்.
பராமரிப்பு
வாக்குவம் க்ளீனரால் வீட்டைச் சுத்தம் செய்துவிட்டு, அந்த வேலையைச் செய்த க்ளீனரை பலரும் சரியாகச்
டஸ்ட் அலர்ஜி ஏற்படாது!
‘சுத்தம் செய்ய வாக்குவம் க்ளீனர் வாங்கினா... அதை வேற சுத்தம் செய்யணும்’ என்று பலரும் இதைத் தவிர்ப்பார்கள். ஆனால், அது எளிமையான காரியமாகத்தான் இருக்கும். மேலும், நேரடியாகத் தூசுகளை சுத்தம் செய்யும்போது அதனால் ஏற்படும் டஸ்ட் அலர்ஜி குழந்தைகளில் இருந்து பெரியவர்கள்வரை சளி, இருமல் என்று பாதிக்கும். ஆனால், வாக்குவம் க்ளீனரில் அதற்கான வாய்ப்பே இல்லை’’ என்று சொன்னார், அஜய்குமார்.
தரையில் இருந்து கூரை வரை வீட்டின் மொத்த க்ளீனிங்கையும் சிம்பிள் அண்ட் ஸ்மார்ட் ஆக்கும் வாக்குவம் க்ளீனரை... வேண்டாம் என்று சொல்ல முடியுமா என்ன?!
சுத்தம்செய்து வைப்பதில்லை. க்ளீனரில் இருக்கும் டஸ்ட் பேக்கை மட்டும் சுத்தம் செய்துவிட்டு வைத்துவிடுகிறார்கள். அது தவறு. பிரஷ், டியூப் என பயன்படுத்தும் மற்ற பொருட்களையும் கழுவி, துடைத்துவைக்க வேண்டும். டிரை மாடல் க்ளீனரை தூசுகளைச் சுத்தம் செய்ய மட்டுமே பயன்படுத்த வேண்டும். கவனக்குறைவாக ஈரம் இருக்கும் இடத்தில் பயன்படுத்தினால், அது மோட்டாரின் ஆயுளைக் குறைக்கும்.
Logged
Print
Pages: [
1
]
Go Up
« previous
next »
FTC Forum
»
தமிழ்ப் பூங்கா
»
பொதுப்பகுதி
»
~ வாக்குவம் க்ளீனருக்கு `வெல்கம்’...டஸ்ட் அலர்ஜிக்கு `டாட்டா’! ~