Author Topic: ~ கத்தரிக்காய் துவையல் ~  (Read 315 times)

Offline MysteRy

கத்தரிக்காய் துவையல்



கத்தரிக்காய் – 3
சின்ன வெங்காயம் – 3/4 கப்
மிளகாய் வற்றல் – 10
புளி – சிறிய எலுமிச்சை அளவு
பெருங்காயம் – சிறிய துண்டு
உளுத்தம் பருப்பு – ஒரு தேக்கரண்டி
நல்லெண்ணெய் – 2 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

கத்தரிக்காயை பாதியாக நறுக்கிக் கொள்ளவும். புளியை வெந்நீரில் ஊறவைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கத்தரிக்காயை போட்டு நிறம் மாறும் வரை வதக்கவும்.
பின் ஒரு தட்டில் ஆறவைத்து தோலை உறிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு மிளகாய்வற்றல், வெங்காயம், பெருங்காயம், உளுத்தம்பருப்பு எல்லாவற்றையும் தனித்தனியாக வறுக்கவும்.
பின் ஊறவைத்த புளி, வதக்கிய கத்தரிக்காய், வறுத்தவை, உப்பு போட்டு சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும்.