Author Topic: ~ கத்தரிக்காய் சாம்பார் ~  (Read 328 times)

Offline MysteRy

கத்தரிக்காய் சாம்பார்



கத்தரிக்காய் – 1 சின்ன வெங்காயம் – 7 புளி பெருங்காயம் துவரம் பருப்பு – 1/2 கப் மைசூர் பருப்பு – 1/2 கப் மிளகாய் – 3 தக்காளி – 1 கறிவேப்பிலை கொத்தமல்லி தழை சாம்பார் பொடிக்கு: கடலைப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன் கொத்த மல்லி விதை – 1 டேபிள்ஸ்பூன் காய்ந்தமிளகாய் – 6 வெந்தயம் – 1/2 டீஸ்பூன் சின்ன சீரகம்- 1/4 டீஸ்பூன் தாளிக்க: கடுகு, சீரகம் – தலா 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை பருப்புடன் மஞ்சள், உப்பு, பெருங்காயம், சிறிது நெய் சேர்த்து நன்கு குழைய வேக வைத்து,
 
மசித்துக் கொள்ளவும். இதனுடன் கத்தரிக்காய்,பச்சை மிளகாய் சேர்த்து வேகவிடவும். பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை சிறிது எண்ணெய் விட்டு, சிவக்க வறுத்து, அரைத்துக் கொள்ளவும். அரைத்த பொடியை பருப்புக் கலவையில் விடவும். புளி விடவும். தக்காளி, வெங்காயம் சேர்க்கவும். பச்சை வாடை போனதும் கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி இறக்கவும். இறுதியில் தாளித்துப் போடவும். சாம்பார் தயார். இட்லி உபயம்: மகி(ஹி) இந்த சாம்பார் நான் ஒரு வார இதழில் இருந்து கற்றுக் கொண்டேன். சிறிது மாற்றங்களுடன் நான் முயற்சி செய்த இந்த ரெசிப்பி என் கணவரின் விருப்பமான டிஷ்.