Author Topic: ~ அன்னாசிப்பழ பச்சடி ~  (Read 420 times)

Online MysteRy

  • Global Moderator
  • Classic Member
  • ****
  • Posts: 226670
  • Total likes: 29016
  • Karma: +2/-0
  • Gender: Female
  • ♥♥ Positive Thinking Will Let U Do Everything ♥♥
    • http://friendstamilchat.com/
~ அன்னாசிப்பழ பச்சடி ~
« on: March 05, 2016, 07:40:09 PM »
அன்னாசிப்பழ பச்சடி



தோல் சீவிய அன்னாசிப்பழம் – 1 1/2 கப் (நறுக்கியது),
மஞ்சள்தூள் – 1/2 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

அரைக்க…

தேங்காய் துருவல் – 1 1/2 கப்,
பச்சை மிளகாய் – 1,
கடுகு -1/4 டீஸ்பூன்.

தாளிக்க…

தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்,
கடுகு – 1/2 டீஸ்பூன்,
வெந்தயம் – 1/2 ஸ்பூன்,
மிளகாய் வற்றல் – 1,
கறிவேப்பிலை – தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

ஒரு பெரிய பாத்திரத்தில் அன்னாசிப்பழத் துண்டுகளை போட்டு மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, அதில் உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்க்கவும். சிறு தீயில் அன்னாசிப்பழம் வேகும் வரை கொதிக்க விடவும். இதற்கிடையில் தேங்காய், பச்சைமிளகாய், கடுகு இவற்றை சிறிது தண்ணீர் விட்டு அரைத்து வைத்துக்கொள்ளவும். அன்னாசிப்பழம் வெந்தவுடன் அரைத்த தேங்காய் விழுதைப்போட்டு நன்றாக கலக்கவும். ஓரிரண்டு நிமிடம் கொதிக்க விடவும். பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் போட்டு தாளித்து அடுப்பில் இருந்து இறக்கவும்.